You are here : Theology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
முற்­போக்கு சிந்­த­னை­க­ளுடன் ஆல­யங்கள்

2018-06-24


“சாதிகள் இல்­லை­யடி பாப்பா” என்று   பார­தியார் அர்த்­த­முள்ள அழ­கான வரி­களில் அன்று பாடி­விட்டுச் சென்­றுள்ளார். ஆனாலும் அவரின் எதிர்­பார்ப்பு இன்று வரை ஈடே­ற­வில்­லை­யென்­பது மிகவும் வருந்­தத்­தக்க விட­யமே. ஒவ்­வொ­ரு­வரும் தத்­த­மது குடும்ப விவ­கா­ரங்­களில் சாதி­களைப் பார்த்து கரு­ம­மாற்­று­வது ஏற்­பு­டை­யது. 

இருப்­பினும் சமூ­கத்­திலும் சமூக நிறு­வ­னங்­க­ளிலும் இவ்­வாறு சாதி வேறு­பாடு பார்த்து செய­லாற்­று­வது ஏற்­பு­டை­ய­தல்ல. பல்­லின மக்கள் வாழும் இலங்கைத் திரு­நாட்டில் இன,  மத,  குல வேறு­பா­டின்றி ஒற்­று­மை­யு­டனும் சகோ­த­ரத்­து­வத்­து­டனும் அனை­வரும் வாழ வேண்­டு­மென பலரும் கருத்துத் தெரி­வித்­துள்ள நிலையில் எமது நாட்டின் சில பகு­திகளில் நேர­டி­யா­கவும், மறை­மு­க­மா­கவும் சிலரால் சில வேறு­பா­டுகள் காட்­டப்­ப­டு­வ­தனால்  தொடர்ந்தும் சமூ­கத்தில் முரண்­பா­டுகள் ஏற்­பட்டுக் கொண்டு தான் இருக்­கின்­றன.தற்­போது மலை­ய­கத்தின் சில பகு­தி­களில் சாதி வேறு­பா­டு­க­ளுடன் செயற்­ப­டு­கின்­றமை அதி­க­ரித்­துள்­ளது. குறிப்­பாக நற்­பி­ர­ஜை­க­ளையும் நல்ல மனி­தர்­க­ளையும் உரு­வாக்கும் பாட­சா­லைகள்,கோவில்கள் ஆகிய இடங்­களில் இவ்­வா­றான வேறு­பா­டு­களைக் காட்டி செயற்­ப­டு­வது விரும்­பத்­தக்க விட­ய­மல்­ல­வென பலரும் கருத்துத் தெரி­வித்து வரு­கின்­றனர். மலை­யகப் பகு­தி­க­ளி­லுள்ள சில ஆல­யங்­களில்  இடம்­பெறும் பூஜை, உற்­ச­வங்­களின் போது பக்த அடி­யார்கள்  தத்­த­மது  சாதி­களை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொண்டு செயற்­பட்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மேலும் ஆலய நிர்­வா­கமும் இவ்­வாறே திட்­ட­மிட்டு அவற்றின் நிர்­வாக உறுப்­பி­னர்­களை தெரிவு செய்­வ­தோடு,

ஆல­யத்தின்  முழு­மை­யான  அதி­கா­ரத்தையும்  தமது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்துக் கொள்­கின்­றனர். 


அத்­தோடு இங்கு சிலர் தமது பண பலத்­தையும், அர­சியல் பலத்­தையும் ஆல­யங்­க­ளினுள்  உட்­பு­குத்­து­வதன் ஊடாக கோவிலின் புனிதத் தன்­மைக்கு  களங்­கத்­தினை  ஏற்­ப­டுத்தி வரு­வ­தா­கவும் பலரும் குற்றம் சுமத்­து­கின்­றனர். அதேபோல் ஒரு சில ஆல­யங்­களில்  பிர­தே­ச­வாதம் தலைத்­தூக்கி உள்­ளமை குறிப்­பி­டத்­தக்க ஒரு விட­ய­மாகும். கடவுள் சந்­நி­தா­னத்தில் இவ்­வா­றான வேறு­பா­டு­க­ளையும் பலத்­தி­னையும் காட்­டு­வதை தவிர்த்து கோவில்­களின் புனிதத் தன்­மையைப் பேணு­வ­தற்கு ஒவ்­வொ­ரு­வரும் தூய சிந்­தை­யுடன் செயற்­பட வேண்­டு­மென கோரப்­ப­டு­கி­றது. அத்­தோடு இந்து சமய விழு­மி­யங்­களை பாது­காக்கும் வகை­யிலும் அதனை கோவில்­களில் போதிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை ஆலய பரி­பா­லன சபைகள் துரி­த­மாக மேற்­கொள்ள வேண்டும்.

இன்று மலை­ய­கத்தில் பர­வ­லாக மத மாற்­றங்கள் இடம்­பெற்று வரு­கின்­றமை யாவரும் அறிந்­ததே.  இவர்­களின் வறுமை, தீராத நோய், குடும்ப சூழ்­நி­லைகள் ஆகிய கார­ணங்­களைக் காட்­டியே மத­மாற்­றங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. சாதி ரீதி­யான ஒடுக்­கு­மு­றைகள் கூட மத­மாற்­றத்­திற்கு வழி­வ­குக்­கின்­றன என்­பதை உரியோர் விளங்­கிக்­கொள்ளல் அவ­சியம். தற்­போ­தைய இளம் சமூ­கத்­தினர் ஆலய நிர்­வாக விட­யங்­களில் தலை­யி­டு­வதை சிலர் விரும்­பா­துள்­ளனர். ஏனெனில் இளையோர் ஆன்­மி­கத்தில் முற்­போக்கு சிந்­த­னை­க­ளுடன் விளங்­கு­வதால் இவர்கள் சாதி மற்றும் ஏனைய விட­யங்­களை பொருட்­ப­டுத்­து­வ­தில்லை .அதனால் அவர்­களை நிர்­வா­கத்­திற்குள் உள்­ளீர்ப்­பது அல்­லது பரி­பா­லன சபையில் அதி­காரம் மிக்க பத­வி­களை வழங்­கு­வ­தற்கு மூத்­த­வர்கள் தயங்­கு­கி­றார்கள். 


  ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் அற­நெ­றிப்­பா­ட­சா­லை­களை  நடத்­து­வதில் கூட ஆலய நிர்­வா­கங்கள் போதிய அக்­கறை காட்­டு­வ­தில்­லை­யென்­ப­தற்­குக்­கா­ரணம் இதில் இளையோர் அதி­க­மாக ஈடு­ப­டு­வ­தினால் ஆகும். பல ஆலய நிர்­வா­கங்­க­ளோடு குறித்த பிர­தே­சத்தில் இந்து இளைஞர் மன்­றங்­களும் சேர்ந்தே இயங்கி வந்­தாலும் அவைகள் மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யு­ட­னேயே நடத்­தப்­ப­டு­கின்­றன. அல்­லது இந்து இளைஞர் மன்­றத்தின் தலை­வ­ராக 65 வய­துக்கு மேற்­பட்ட ஒருவர்   விளங்­குவார்.   பிர­தே­ச­வாத  வேறு­பா­டு­க­ளுடன் செயற்­ப­டாது இந்து சம­யத்தின் இருப்பை தக்க வைத்துக் கொள்­வ­தற்­காக அனை­வரும் ஒன்­று­பட்டு கரு­ம­மாற்ற வேண்­டு­மென பலரும் வேண்­டுகோள் விடுக்­கின்­றனர்.

மேலும் இந்து ஆல­யங்­களில் இடம்­பெறும் விசேட நிகழ்­வு­களின் போது அருகில் உள்ள பாட­சா­லை­க­ளையும் இணைத்துக் கொண்டு செயற்­படும் போது எதிர்­கால சமூ­கத்தை மேலும் வலுப்­ப­டுத்தக் கூடி­ய­தாக இருக்கும். மேலும் இவ்­வா­றான நிகழ்­வு­களின் போது இந்து சமயம் தொடர்­பான போதனைகளை வழங்குவதற்காக சமய விற்பனர்களை பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். அத்தோடு இந்து கலாச்சார அமைச்சு சின்மியா மிஷன் போன்ற இந்து சமயத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் நல்லுறவை கட்டியெழுப்புவதன் மூலம் எமது எதிர்கால சந்ததியினர் இந்து சமயத்தைவழுப்படுத்த கூடியதாக இருக்கும். இவ்வாறு சாதி,பிரதேசவாதம் கொண்டு இயங்கும் சிலரிடம் கேட்க வேண்டிய கேள்வி என்னவெனில் நீங்கள் வணங்கும் தெய்வம்  இப்படி பேதம் பார்த்தா அருள் கடாட்சத்தை வழங்குகிறது? 

 -குறிஞ்சி மகன்