2018-07-17
ஆடி மாதத்தில் பொதுவாக இந்துக்கள் எந்த ஒரு புதிய முயற்சியையும் தொடங்குவதில்லை, ஆடி மாதம் நிலையற்ற மாதம் இதன் பெயரே இதை கூறுகின்றது. இருப்பினும் ஆடி மா 18 ஆம் திகதி மட்டும் சுபகாரிய செய்ய உகந்த நாளாக கணிக்கப்பட்டுள்ளது. இன் நாள் ‘பதினெட்டாம் பெருக்கு’ அல்லது ‘ஆடிப்பெருக்கு’ என சிறப்பாக அழைக்கப்படும்.
பதினெட்டாம் பெருக்கு தினத்தில் நல்லநேரம் பார்த்து புது வீடு கிரகப்பிரவேசம் மற்றும் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம்
இந்த ஆண்டுக்கான ஆடிப்பெருக்கு வெள்ளிக்கிழமை வருகின்றது.
அன்றைய தினம் காலை 10 மணி முதல் 10.30 மணி வரை அல்லது மாலை 5 மணி முதல் 6 மணி வரை புதிய முயற்சிகளுக்கு சுபநேரமாக அமைவதனால் எந்த ஒரு சுபகாரியத்தையும் தொடங்கி வெற்றியடையலாம்.