You are here : Viharas

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இந்தியாவின் மிகப் பழைய பெளத்த மடாலயம்

June 14 2016


புத்தர் பிறந்த இடம், அவர் ஞானமடைந்த இடம் என பௌத்த மதத்தின் புனித ஸ்தலங்கள் இந்தியாவில் ஏராளமாக உண்டு. அவற்றில் ஒன்று தான் சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான கேங்டாக் நகருக்கு அருகில் இருக்கும் ரும்டெக் பெளத்த மடாலயம் ஆகும். இது தான் இந்தியாவில் இருக்கும் மிகவும் பழைமையான பெளத்த மடாலயமாகும். 

கடல் மட்டத்தில் இருந்து 5000அடி உயரத்தில் இமயமலையில் அமைந்திருக்கும் இந்த மடாலயத்தின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது. 

பெளத்த மத தலைவரான தலாய் லாமா இந்தியாவில் அடைக்கலம் புகுந்திருப்பதை போலவே 17ஆம் நூற்றாண்டில் சீனப்படைகள் திபெத்தை கைப்பற்றிய பிறகு அங்கிருந்து தப்பித்து 'ரும்டெக்' என்ற இவ்விடத்தில் அடைக்கலம் புகுந்தார், 16 ஆம் கர்மபா என்ற திபெத்திய அரசன்.  
அந்த அரசனால் 1740ஆம் ஆண்டு ரும்டெக்கில் பெளத்த மடாலயம் கட்டப்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் பராமரிப்பின்றி சேதமடைந்திருந்த இந்த மடம் 1961ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டிருக்கிறது. 

திபெத்திய கட்டிடக்கலை அமைப்பின்படி கட்டப்பட்டிருக்கும் இந்த மடாலயத்தின் சுவர்களில் புத்தரின் வாழ்க்கை பயணத்தை விளக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.