You are here : Viharas

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




தீய சக்திகளை விரட்டும் வழிப்பாட்டு முறை - கண்டிய ‘வெஸ்’ நடனம்

2018-06-19


 கண்டி எசல பெரஹரவில் பார்வையாளர்களை அதிகளவில் கவரும் நாட்டியம் வெஸ் நாட்டியம் ஆகும். இவ் பெரஹரவை காண்பதற்கு உலகில் பல பாகங்களில் இருந்தும் சுற்றுலாபயணிகள் வருகை தருவது இதன் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றது. இலங்கை மக்கள் இனமத பேதமின்றி இவ்விழாவில் கலந்து கொள்வது குறிப்பிடதக்க விடயமாகும்.


இலங்கையின் கலாசாரத்தைப் பறைசாற்றும் ஒரு பாரம்பரியக் கலை வடிவமான கண்டிய நடனம் இரண்டாம் நூற்றாண்டில் கண்டி இராச்சியத்தின் அரச குடும்பத்தில் தோன்றியதாக வரலாறு கூறுகின்றது. இவ் நடனமானது கோம்ப தெய்யோ எனப்படும் கடவுளின் ஆசியை வேண்டி நடாத்தப்படும் 'கோம்ப ஹங்காரிய' என்ற சடங்கை அடிப்படையாக வைத்து வளர்ச்சி கண்டுள்ளது.
தொன்மைச் சிறப்பு வாய்ந்த இந்நடனம் 2,500 வருடங்களுக்கு முன்னதாக இந்தியாவிலிருந்து இலங்கையை வந்தடைந்த விஜய மன்னன் காலத்தில் தோன்றியதாக செவி வழிக்கதைகள் கூறுகின்றன.


 விஜய மன்னன் மீதிருந்த சினம் காரணமாக புராதன இலங்கையின் பூர்வீகக் குடிமக்களில் ஒருத்தியான குவேனி இட்ட சாபத்தினால் விஜயனின் சகோதரன் பாண்டுவாசதேவன் நோய்வாய்ப்பட்டான் என்றும் அந்த நோயிலிருந்து மீள்வதற்காக தீய சக்திகளை விரட்டும் 'சாந்திகர்ம நிகழ்வு' நடாத்தப்பட்டது என்றும் அறிகின்றோம்.


 பின்னாளில் இந்த சாந்திகர்ம நிகழ்வு தூய்மைப்படுத்தும் சடங்கான 'கோம்ப ஹங்காரிய' நிகழ்வாக மாற்றம் பெற்றது. மக்களை நோய் நொடியிலிருந்தும் பிற துன்பங்களிலிருந்தும் காப்பாற்றும் 'கோம்ப' (இது தமிழில் கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்த வேப்ப மரம் என்று பொருள்படும்) தெய்வத்தின் ஆசி வேண்டி இந்தச் சடங்கு நடாத்தப்பட்டு வந்தது. இத்தகைய வரலாற்றுப் பின்னணியில் 19ஆம் நூற்றாண்டு முதல் கண்டிய நடனம் எசலபெரஹரவில் இடம்பெற ஆரம்பித்தது.