You are here : Viharas

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஜனாதிபதியால் இன்று திறந்து வைக்கப்படும் வரலாற்று முக்கியத்துவமிக்க தூபி

2018-06-24


பொலன்னறுவையில் உள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க பௌத்த மற்றும் இந்து தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்களில் உனகலா வெஹர முக்கிய இடம் வகிக்கின்றது.


உனகலா வெஹர புண்ணிய பூமியை உலக வாழ் பௌத்த மக்கள் தரிசிப்பதற்கு ஏற்ற வகையில் புனர் நிர்மாணம் செய்யும் நடவடிக்கை ஜனாதிபதி யின் வழிகாட்டலின் கீழ் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.


புனர் நிர்மாண பணிகள் முடிவடைந்த நிலையில்  பொலன்னறுவை ஹிங்குரக்கொட உனகலா வெஹர ரஜமகா விகாரையின் வரலாற்று முக்கியத்துவமிக்க தூபியை திறந்து வைக்கும் புண்ணிய நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெறஉள்ளது.


அநுராதபுர யுகத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படும் பண்டைய புண்ணிய பூமியான இந்த இடம் மற்றும் அதனை அண்மித்த பல்வேறு தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்கள் துட்டகைமுனு மன்னரின் காலத்திலும் நிசங்க மல்ல அரசனின் காலத்திலும் பிரசித்தி பெற்று விளங்கியதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.