You are here : Worship

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பஞ்ச விருட்சம்

November 14 , 2017


மருதமலை கோயிலின் மகாமண்டபத்தின் தென்கிழக்கே ஐந்து மரங்கள் அரசு, ஆல், வேம்பு, வக்கணை, நுணா ஒன்றாக பின்னிப் பிணைந்த பஞ்ச விருட்சம் உள்ளது.

இந்த மரத்தின் அடியில் விநாயகர் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். இந்த மரத்தின் காற்று மேலே பட்டாலே போதும்.

நோய்கள் பறந்தோடும். இந்த மரத்தில்  பல முனிவர்கள் இன்றும் கண்களுக்கு தெரியாமல் தவம் செய்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த மரம் வேறு எங்கும் காணக்கிடைக்காத அபூர்வ மரமாகும். இந்த மரம் நீண்ட காலமாக உள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் பஞ்ச விருட்சத்தை வணங்கினால் நீண்ட ஆயுள் கிடைக்கும். 

பாவமும், வினையும் அகன்றுவிடும். பஞ்ச விருட்சத்தை வணங்கிவிட்டு கொடிக்கம்பத்தை தரிசிக்க வேண்டும். பின்னர் முருகனின் தரிசனத்துக்காக சந்நதிக்கு செல்லவேண்டும்.

அங்கு முருகனின் திருவுருவத்தில் லயித்து அந்த முருகனின் சுந்தரவடிவத்தை பார்த்து பூஜிக்கலாம்.

கொங்கு நாட்டில் இந்த மருதமலை முருகனைத் தவிர வேறு எந்த முருக தரிசனமும் இந்த வசீகத்தன்மையை கொடுக்க முடியாது என்றே கூறலாம்.