You are here : Worship

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
சிவ­னொ­ளி­பாத மலையின் அடி­வா­ரத்தில் 12 ஜோதி­லிங்க தரி­சனம்

December 05 , 2017


சிவ­னொ­ளி­பா­த­மலை அடி­வா­ரத்தில்  சிவ­ஈஸ்­வர தேவஸ்­தா­னத்தில் 3 ஆம் திக­தி­ தொடக்கம் 5 ஆம் திக­தி­ வரை காலை 9.00 மணி­முதல் இரவு 11.00 மணி­வரை மக்கள் பன்­னிரு ஜோதி­லிங்­கங்­களைத் தரி­சித்­தருள் பெறலாம்.

பார­தத்தின் வெவ்­வேறு மாநி­லங்­க­ளி­லுள்ள மிகவும் மகி­மை­வாய்ந்த பன்­னிரு ஜோதி லிங்­கங்­களை ஒரே­யி­டத்தில் தரி­சிக்கும்  நிகழ்வு  எதிர்­வரும் 5 ஆம் திக­தி­ வரை சிவ­னொ­ளி­பா­த­மலை அடி­வா­ரத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது.

 பார­தத்தின் மகிமை வாய்ந்த 12 ஜோதி­லிங்க தரி­சனம்  ஆன்­மீகக் கண்ணைத் திறக்­க­வல்ல பட­வி­ளக்கக் கண்­காட்சி, மனச்­சு­மையை இறை­வ­னிடம் கொடுப்­ப­தற்­கான ஆன்­மீக யாக­குண்டம், இறை­வ­னுடன் நெருக்­க­மான அனு­ப­வத்தைப் பெறு­வ­தற்­கான தியானம் போன்­ற­வற்றை மக்கள் தெரிந்­துக்கொள்­வ­தற்­கான இல­வச நிகழ்­வாக இது இருக்­கின்­றது.

இல­வ­ச­மாக இடம்­பெ­ற­வுள்ள இந்­நி­கழ்வில், ஆன்­மிக நூல்­களும் தியான,  பாடல் இறு­வெட்­டு­களும் விற்­பனை செய்­யப்­ப­ட­வுள்­ளன. மஸ்­கெ­லி­யாவில் நல்­ல­தண்­ணியில் அமைந்­துள்ள சிவ­னொ­ளி­பா­த­மலை அடி­வா­ரத்தில்  சிவ­ஈஸ்­வர தேவஸ்­தா­னத்தில்  3 ஆம் திக­தி­முதல் 5 ஆம் திக­தி­வரை காலை 9.00 மணி­முதல் இரவு 11.00 மணி­வரை மக்கள் பன்­னிரு ஜோதி­லிங்­கங்­களைத் தரி­சித்­தருள் பெறலாம்.

 12 ஜோதி­லிங்­கங்கள்

 பார­தத்தைப் பொறுத்­த­வ­ரையில் பன்­னிரு ஜோதி­லிங்­கங்கள் போற்­றப்­பட்டு வரு­கின்­றன. முத­லா­வது ஜோதி­லிங்கம்  குஜ­ராத்­தி­லுள்ள சோம­நாதர். சிவன் அழி­யாத ஞானம் என்னும் அமிர்­தத்தைக் கொடுத்து, மனித ஆத்­மாக்­களைத் தெய்­வீகக் குணங்கள் நிறைந்த தேவர்­க­ளாக்கி, சுவர்க்க வாழ்வு கொடுத்­த­தையே இது குறிக்­கின்­றது.

இரண்­டா­வது ஜோதி­லிங்கம் ஆந்­திர மாநி­லத்தில் உள்ள மல்­லி­கார்ஜுன். இது அவர் ஆத்­மாக்­களை மாயையை வென்ற அர்­ஜு­னர்­க­ளாக ஆக்­கிய பெரு­மையைக் கூறு­கின்­றது. மூன்­றா­வது ஜோதி­லிங்கம் மத்­தியப் பிர­தே­சத்தில் உஜ்­ஜ­யினி நக­ரத்தில் வீற்­றி­ருக்கும் மகா­கா­லேஸ்­வரர் ஆவார். அவர் எமக்கு வரும் தீமை­களை அழிப்­பவர் ஆவார்.

 மத்­தியப் பிர­தே­சத்தில் உள்ள ஓங்­கா­ரேஸ்­வரர் சத்­தி­யத்­தை ­வெ­ளிப்­ப­டுத் ­து­ப­வ­ராக உள்ளார். இம­ய­ம­லை­யில் வீற்­றி­ருக்கும் கேதா­ர­நாதர் மனி­தர்­களை தேவர்­க­ளாக்கிச் சகல சௌபாக்­கி­யங்­க­ளு­டனும் வாழ வைப்­பவர். மகாராஷ்டிராவில் உள்ள பீமா­சங்கர் எம்மில் உள்ள துர்க்­கு­ணங்­களைத் தகர்த்­தெ­றி­வ­தற்­கு­ரிய சக்­தியைக் கொடுப்­பவர்.

மகா­ராஷ்­டி­ராவில் உள்ள கிருஷ்­ணேஸ்­வரர் மனி­தர்கள் தங்­களை மறந்து உல­கா­ய­வி­ட­யங்­களில் மூழ்கிப் பல­வீ­ன­ம­டைந்­தி­ருக்­கும்­பொ­ழுது, மீண்டும் ஆத்ம தீபம் ஏற்றி வாழ்வு கொடுப்­பவர்.

இரா­மேஸ்­வ­ரத்­தி­லுள்ள ஜோதி­லிங்­க­மா­னவர் தேவர்க்கும், மூவர்க்கும் தந்­தை­யாக விளங்­கு­பவர். குஜ­ராத்­தி­லுள்ள நாகேஸ்­வரர் மனி­தனைத் தன்­னு­டைய கோரப் பிடியில் வைத்­தி­ருக்­கின்ற காமம், கோபம், பற்று, பேராசை, அகங்­காரம் ஆகிய கொடிய விஷத்தை ஆத்­மாக்­க­ளி­லி­ருந்­து­அ­கற்­று­பவர்.

 ஜர்கண்ட் மாநி­லத்­தி­லுள்ள வைத்­தி­ய­நாதர் ஆத்­மா­வி­லுள்ள பயம், சந்­தேகம், பொறாமை, கவலை, மனந்­த­ளரல், அறி­யாமை போன்ற நோய்­களைக் குணப்­ப­டுத்­து­வதன் மூலம் மனம், உடல் ,பொருள், உற­வுகள் சதா சுபிட்­ச­மாக இருக்கும் வாழ்­வுக்கு வழி­கோ­லு­பவர்.

மகா­ராஷ்­டி­ராவில் உள்ள திரி­யம்­ப­கேஸ்­வரர் பிரம்மா, விஷ்ணு, சங்­க­ரரைப் படைக்கும் மும்­மூர்த்தி சிவ­னாக விளங்­கு­கிறார். உத்­தரப் பிர­தே­சத்தில் காசியில் அமைந்­துள்ள விஸ்­வ­நாதர் நற்­க­தி­ய­ளிப்­பவர் எனப் போற்­றப்­ப­டு­கிறார். இப் பன்­னிரு ஜோதி­லிங்­கங்­களை ஒரே தலத்தில் தரி­சிப்­பது பக்த அடி­யார்­க­ளுக்கு மகா­பாக்­கி­ய­மாகும்.

 பட­வி­ளக்கக் கண்­காட்சி

நான் யார்? நான் எங்­கி­ருந்து வந்­தேன்? என்­னு­டைய உண்­மை­யான, நான் இழந்த, ஆனால், நான் வாழ்வில் வெற்றி பெறத் தேவை­யான குணங்­க­ளா­கிய அன்பு, அமைதி, தூய்மை,  சந்­தோஷம், கருணை, ஞானம், சக்­தி­களை நான் மீண்டும் எவ்­வாறு பெற்றுக் கொள்­ளலாம் போன்ற பல கேள்­வி­க­ளுக்குப் பதில் கிடைக்கும் வகையில் எவரும் புரிந்­து­கொள்­ளக்­கூ­டிய முறை­யில இரா­ஜ­யோக பட­வி­ளக்கக் கண்­காட்சி ஒழுங்­கு­செய்­யப்­பட்­டுள்­ளது.

மனக்கவலைகளைக் கையளிப்பதற் கான ஆன்மீக யாக குண்டம், இறை தியானஅனுபவம்: அத்துடன் மக்கள் அமர்ந்தி ருந்து தியானத்தின் மூலம் அமைதியையும் ,ஆத்ம சக்தியையும் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

சகலஇனத்தவருக்கும் பொதுவான நிகழ்வு என்பதால் அனைவரும் கலந்து கொள்ளமுடியும். இதுபற்றிய மேலதிக தகவல்களை 0772323415,  0812223055 ஆகியதொலைபேசி இலக்கங்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.