You are here : Writers

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
கலை இலக்கிய சமூக காலாண்டிதழ்

November 14 , 2017


திரு­மறைக் கலா­மன்­றத்தின் கலை இலக்­கியக் காலாண்­டி­தழின்  (ஜூலை –செப்­டெம்பர் 2017) 63 ஆவது இதழ் கலை­மு­கத்­துக்கே உரித்­தான தனித்­து­வத்­து­டனும், வானவில் போன்ற அழ­கு­டனும் ஆழத்­து­டனும் வெளி­ வந்­தி­ருக்­கி­றது.

2 ஆம் பக்க “மீப்­பு­னை­வியல் மொழி” தலை­யங்­கத்­தி­லி­ருந்து அதற்கோர் அனு­ச­ர­ணை­யாக அல்­லது பதி­லாக அமையும் 74 ஆம் பக்க “மீௌழும் திறன் விருத்தி” வரை  80 பக்­கங்­களும்  பல்­வேறு வண்­ணக்­க­ல­வைகள் தான்! ஆக­வேதான் ஆழம் கொண்ட வானவில் என்றேன்.

கறுப்பு எரு­மையில் கட­மைப்­ப­வனி வரும் கனம் ராஜ­ராஜ கூற்­றுவன் அவர்­க­ளுக்­கான மரி­ய­சே­வியர் அடி­க­ளாரின் (பிர­தம ஆசி­ரியர்–கலை­முகம்) கடிதம் 3 ஆம் பக்க சி.ரமேஷை நினை­வு­ப­டுத்­தி­யது அல்­லது இழுத்து வந்து நிறுத்­தி­யது.

மீப்­பு­னை­வியல் நோக்­கி­லான ஈழத்துச் சிறு­க­தை­கள் ­சில பற்­றிப்­பேசும் சி. ரமேஷ் “மொழிக்­கு­றியின் அர்த்த இயங்­கு­மு­றைக்­க­மைய யூகங்­களின் அடிப்­ப­டையில் வாசிப்பை நிகழ்த்தும் வாசகன் தன் இஷ்­டப்­படி அடுக்­கு­களைச் செய்து கொள்­கிறான்.

பிர­தியின் அர்த்தம் வாசிக்­கப்­படும் போதே உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­றது” என்­றெ­ழு­து­கின்றார் ரமேஷ்.

வாச­கனின் இஷ்­டப்­படி யூக அடுக்­கு­களை இந்தத் தலை­யங்­கமும்  உற்­பத்தி  செய்­வ­தால்தான் மீப்­பு­னை­வியல் தலை­யங்கம் என்றேன்.

சி.ரமேஷின் கட்­டுரை மிக முக்­கி­ய­மா­னது. பின் நவீன புனை­க­தைகள் தமி­ழுக்கு  பரிச்­ச­ய­மா­னது பற்றி, பரிச்­ச­யப்­ப­டுத்த உத­விய சிற்­றி­தழ்கள் பற்றி இப்­பு­திய சொல்­மு­றையைப் பயன்­ப­டுத்தி புனை­க­தை­களில்  வெற்­றி­பெறும் நமது படைப்­பா­ளிகள் பற்­றி­யெல்லாம் விரி­வாகப் பேசும் கட்­டுரை இது.

திசே­ராவின் படைப்­புகள் பற்­றியும் அவ­ரு­டைய யோவான் 14 : 2 தொகுதி பற்­றியும் கூடு­த­லா­கவே பேசப்­பட்­டுள்­ளது. வெளிப்­ப­டைத்­தன்­மை­யற்று பூட­க­மாகப் பேசு­வதில் முன்­நிற்­பவர் திசேரா.

"கிங்­பார்டி" என்ற சொல்லை பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார் திசேரா. வாச­கனின் எந்த யூகத்­துக்கும் கட்­டுப்­ப­டாத வார்த்தை இது. கிங் என்றால் தமிழில் ராஜா பார்ட்டி என்றால்  சிங்­க­ளத்தில் “பக்­சய ”(யோவான் 14 : 2 பக்கம் 64)

போர்க்­காலச் சூழல் படைப்பில் அனு­ம­திக்க மறுத்த வெளிப்­ப­டை­யான அனு­ப­வங்­களின் பகிர்வு இப்­படி குறி­யீ­டாக.

போர்க்­கா­லத்தின்  பின்­னான கவி­தை­களின் பாடு­பொ­ருள்­களை மையப்­ப­டுத்­திய தள வேறு­பா­டுகள் பற்­றிய இ.இராஜேஷ் கண்­ணனின் தேடல்­களும் இன்­னொரு தளத்தில் முக்­கி­ய­மா­னதே. சேரனின் காடாற்று உள்­ளிட்ட பா.

அகி­லனின் சர­ம­க­விகள்;  சித்­தாந்­தனின்  “துரத்தும் நிழல்­களின் யுகம்” கரு­ணா­க­ரனின் “பலி ஆடு” சிந்­து­தா­சனின் “கடலின் கடைசி அலை”­கி­ரி­சாந்தின் “மயான காண்டம் பிந்­திய பதிப்பு” யாத்­ரி­கனின் “காலப்­பழி” போன்ற கவிதை நூல்­களை முன்­வைத்த தேடல் இது.

சேரனின் ‘காடாற்று’ கவிதைத் தொகுதி காலச்­சு­வடு ஏற்­பாட்டில் வெளி­யீடு செய்­யப்­பட்ட போது மாற்­றுக்­க­ருத்­தா­ளர்­களால் வெளி­யீட்டு விழா குழப்­பப்­பட்ட நினைவும் எழு­கி­றது.

“அழி­வு­க­ளி­லி­ருந்து மேலெழும் இருத்­த­லுக்­கான குரல்” என்னும் முஸ்­டீனின் கட்­டு­ரையும் அரு­மை­யாக வந்­துள்­ளது. “அப்போ கலிப்டோ”,  “அவதார்” ஆகிய இரண்டு திரைப்­ப­டங்கள் பற்­றிய கட்­டுரை இது. வாசிக்கும் போது  வசந்­த­பா­லனின் “அரவான்” திரைப்­ப­டமும் நினை­வி­லோ­டு­கி­றது.

அடி­க­ளாரின்  கடி­தத்­த­லை­யங்­கத்­துடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்­பு­டை­ய­தா­கவே இவைகள் அமை­கின்­றன. ஏனைய கட்­டு­ரை­களும் இவ்­வி­தழைச் சிறப்புச் செய்­கின்­றன.

ஐ.சாந்தன்; தமிழ்­நேசன் அடிகள்; அன்­பு­ராசா அடிகள்; நா. நவராஜ் ; தமின் ; சாங்­கி­ருத்­தியன், பாத்­தி­மா­ந­சீபா ;  அ. அஜந்தன் என்று11 காத்­தி­ர­மான கட்­டு­ரைகள். பி.எஸ்.அல்­பி­ரட்டின் இஸ்ரேல் – பலஸ்தீன் ஒரு வர­லாற்றுப் பெட்­ட­கமே.

சாந்­தனின் சுந்­தர்­புரிக் கதைகள் அவ­ருக்­கே­யு­ரித்­தான ஆங்­கில இலக்­கிய ஆளு­மை­யுடன் இலக்­கியத் தகவல் பொழி­வா­கி­றது.

CANTERBURY TALES கந்தர் புரிக்­க­தை­க­ளா­வதும் சாமுவல் சீவ­ரத்­தினம்  SAMUEL LIVINGSTON  ஆக மாறு­வதும் இலேசுப்­பட்ட விட­யங்­களா!

ஓவியர் வீர சந்­தானத்தின் மறை­வுக்­கான (13. 07 . 2017) சாங்­கி­ருத்­தி­யனின் அஞ்­சலிக் குறிப்பும் முக்­கி­ய­மா­னதே.

ஒரு சிறு­கதை – உடுவில் அர­விந்தன் ஒரு மொழி­பெ­யர்ப்புச் சிறு­கதை ரிஷான் ஷெரீப் : பத்து கவி­தைகள் இரண்டு மொழிப்­பெ­யர்ப்புக் கவி­தைகள் மற்றும் பத்தி ; பதி­வுகள் என இலக்­கிய மணம் கமழும் இத­ழாக வந்­தி­ருக்­கி­றது 63 ஆவது கலை­முகம்.