You are here : Writers

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
எழுத்­தாளர் மீரா பார­தி­

January 8 , 2018


எழுத்­துக்கும் வாழ்­வுக்­கு­மான  தொடர்­பே எனது படைப்­புகள்

எனது கட்­டு­ரை­க­ளுக்கும் எனது வாழ்­வுக்கும் இடையில் நிறைய தொடர்­புகள் உள்­ளன. எனது நூல்­களில் எழு­தி­யுள்ள கட்­டு­ரை­களை எனது அனு­ப­வத்­தி­லி­ருந்து ஆரம்­பித்து கோட்­பாட்டு சிந்­தாந்த பார்­வை­க­ளி­னூ­டாக பார்ப்­ப­தற்கு சிறிது சிறி­தா­கவே முயற்­சித்­தி­ருக்­கின்றேன்.

நான் எழு­து­வ­துடன் மட்டும் நிற்­ப­வ­னல்ல. எழு­து­ப­வற்றை எனது வாழ்வில் பரீட்­சித்து பார்ப்­ப­வன்­ என்கிறார் எழுத்தாளர் மீராபாரதி.

மட்­டக்­க­ளப்பு பொது நூலக கேட்­போர்­கூ­டத்தில் பார்த்­தி­பனின் கதைத் தொகுப்பு அறி­முகம், நூல் வெளி­யீட்டில்  எழுத்­தாளர் மீரா பார­தியை கடந்த வாரம், ஒரு மாலை வேளையில் சந்­திக்கும் வாய்ப்பொன்று கிடைத்­தது.

இதன்போது, அவரின் இலக்­கியப் பயணம் , அவர் எழுதிய நூல்கள்  தொடர்­பான அனு­ப­வங்­களை கேசரி வாச­கர்­க­ளுக்­காக இவ்­வாறு பகிர்ந்து கொண்டார்.

 நீங்கள் எழுதியுள்ள நூல்கள் மூலம் சாதா­ர­ண­மாக மற்­றொ­ரு­வ­ருடன் பேசத் தயங்கும் விட­யங்­களை வெளிக்­கொ­ணர்ந்­துள்­ளீர்கள். அந்த வகையில் இவ்­வா­றான விட­யங்­களை வெளிக்கொ­ணர்­வ­தற்கு பின்­ன­ணி­யாக இருந்­த­வை­க­ளையும் சொந்த விடயங்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற் கான தற்­து­ணிவு பற்­றியும் குறிப்­பிட முடி­யுமா?

எனக்கு அர­சியல் சார்ந்து செயற்­பட்ட அனு­ப­வங்கள் சிலவும் அப்­பாவின் அர­சியல் செயற்­பா­டு­களை கண்டும் கேட்டும் வளர்ந்த அனு­ப­வங்­களும் எனக்குள் பல கேள்­வி­களை உரு­வாக்­கின.

என்னைப் பற்றி என்னை சுற்­றி­யி­ருப்­ப­வர்­களைச் சார்ந்து கேள்­வி­களை ஏற்­ப­டுத்­தின. சிறு­வ­யது முதல்பால், பாலியல், காமம், காதல் தொடர்­பாக நான் பெற்ற அனு­ப­வங்­களும் மற்­ற­வர்­க ளின் செயற்­பா­டு­க­ளினால் பெற்­ற­வையும் பல கேள்­வி­களை ஏற்­ப­டுத்­தின.

நாம் ஈழத்­த­மி­ழர்­க­ளாக இருப்­ப­தனால் எமக்கு மர­ணங்கள் சாதா­ர­ண­மா­னவை. ஆனால் இந்த மர­ணங்­க­ளினால் ஏற்­பட்ட இழப்­புகள் எங்­க­ளிடம் பல வகை­யான ஆறா மன வடுக்­களை உரு­வாக்­கின.

இதி­லி­ருந்து எவ்­வாறு விடு­ப­டு­வது என்­பது தேட­லா­னது.

 இக்­கேள்­விக்­கான பதிலை 2000 ஆம் ஆண்டு வரை நான் தேர்ந்­தெ­டுத்த மார்க்­சிய லெனி­னிய சிந்­த­னைகள் தர­வில்லை. தற்­செ­ய­லாக வாசிக்க கிடைத்த ஓசோவின் நூல்கள் பல பார்­வை­க­ளையும் வழி­க­ளையும் காட்­டின.

இவ்­வாறு பெற்ற அறி­வையும் அனு­ப­வத்­தையும் பகிர வேண்­டு­மென விரும்­
பினேன். இவை பல­ருக்கு வழி­காட்­டி­யாக இருக்கும் என உணர்­கின்றேன்.

உங்­க­ளது நூல்கள் பிற­ரது நூல்­க­ளி­லி­ருந்து முற்­றிலும்  வேறு­ப­டு­வ­துடன் நூல்­க­ளுக்­கி­டை­யேயும் தொடர்பு இருப்­ப­தாக கருத முடி­கி­றது. இது பற்றி உங்கள் கருத்து ?

எனது நான்கு நூல்­களும் நான்கு விட­யங்­களை பேசு­கின்­றன. இருப்­பினும் இந்த நான்கு நூல்­க­ளுக்கும் இடையில் தொடர்­பு­க­ள் இருக்­கின்­றன.

உண்­மையில் பால், பாலியல்,  காமம்,  காதல் , பெண்,  பெண்­ணியம் என்ற நூல் முத­லா­வ­தா­கவும் 'மரணம் இழப்பு மலர்தல்' என்ற நூல் இரண்­டா­வ­தா­கவும் பிரக்ஞை ஓர்  அறி­முகம் என்ற நூல் மூன்­றா­வ­தா­கவும் நான் ஒரு கடவுள் என்ற நூல் நான்­கா­வ­தா­கவும் வந்­தி­ருந்தால் அதில் ஒரு படி­முறை வளர்ச்­சியை கண்­டி­ருக்­கலாம்.

பால், பாலியல்..... என்ற நூல் சிறு­வ­யது முதல் இது தொடர்­பாக எதிர்­கொண்ட சொந்த பிரச்­சி­னை­களும் மற்­ற­வர்­களின் பிரச்­சி­னை­களை கண்டும் கேட்டும் அறிந்­ததன் ஊடாக தேடிய விட­யங்கள். இவை நம் நாளாந்த வாழ்வில் நாம் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள். இது புதிய விட­யங்கள் அல்ல.

ஆனால், அவை தொடர்­பான புதிய பார்­வைகள் எங்­க­ளிடம் இல்லை. சமூக நிறு­வ­னங்கள் மீளக் கூறிய பார்­வைகள் மட்­டுமே நம்­மி­ட­மி­ருக்­கின்­றன. இதி­லி­ருந்து முறித்­துக்­கொண்டு புதி­தாக நாம் பார்க்க தேவை இருக்­கின்­றது. அதுவே இப்­பி­ரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கும் களை­வ­தற்கும் வழி­வ­குக்கும்.

பெண்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றைகள், பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள் வினா­டிக்கு வினாடி அதி­க­ரித்துச் செல்லும் நிலையில், இவ்­வா­றான சிந்­த­னைகள், செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்த எவ்­வா­றான முன்­னெ­டுப்­பு­களை முன்­னெ­டுக்க வேண்டும் என கரு­து­கின்­றீர்கள்?

வன்­பு­ணர்­வு­க­ளையும் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளையும் இல்­லாமல் செய்ய வேண்­டு­மாயின் பாலியல் தொடர்­பான கற்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். ஆண்­க­ளையும் பெண்­க­ளையும் மூன்றாம் பாலி­னத்தவர்­க­ளையும் ஒன்­றாக இணைத்து கற்­பிக்க வேண்டும்.

குழந்­தை­களை ஆண், பெண் என்ற இரட்டைத் தேர்­வாக மட்டும் வளர்க்­கக்­கூ­டாது. காதல் என்­பது சமூ­கத்தில் சாதா­ர­ண­மான ஒன்­றாக இருக்க வேண்டும். காமம் இயல்­பான ஒன்­றாக இருக்க வேண்டும். இவ்­வா­றான புதிய பார்­வைகள் பல பிரச்­சி­னை­களை இல­கு­வாக தீர்க்கும்.

உங்­க­ளது பிரக்ஞை , மரணம் இழப்பு மலர்தல் ஆகிய நூல்கள், சமூ­கத்­துக்கு தேவை­யான விட­யங்­களை எடுத்­து­ரைப்­ப­தாக உள்­ள­தென கரு­து­கின்­றீர்­களா ?

 பல மர­ணங்­களை சந்­தித்த நாம் எவ்­வாறு அவற்­றி­லி­ருந்து விடு­பட்டு அல்­லது இழப்­பு­களை ஆற்­றுப்­ப­டுத்தி மீண்டும் வாழ முயற்­சிப்­பது என்­பது இன்­றைய ஈழத்து தமிழ் சமூ­கத்தை பொறுத்தவரை அவ­சி­ய­மா­னது.

ஈழத்து தமிழ்ச் சமூகம் பல மர­ணங்­களை ஆறாவடுக்­களை கொண்­டுள்­ளது. இதி­லி­ருந்து விடு­பட்டு ஆரோக்­கி­ய­மாக வாழ கொஞ்­ச­மா­வது வழி சொல்­வ­தாக மரணம் இழப்பு மலர்தல் பங்­க­ளிப்பு செய்யும் என நம்­பு­கின்றேன்.

பெண்­ணி­யத்தை புரிந்­து­கொண்ட, இழப்­பு­க­ளி­லி­ருந்து விடு­பட்டு ஆற்­றுப்­ப­டுத்­தல்கள் மூல­மாக மீண்டும் புதி­தாக வாழ முயற்­சிக்கும் நாம் பல பிரச்­சி­னை­களை மீள எதிர்­கொள்வோம். நமது பிரக்­ஞை­யினை மீண்டும் எம்மை பழைய வாழ்­நி­லைக்கு இழுத்துச் செல்லும். இவ்­வாறு இழு­பட்டுச் செல்­லாது முன்­னோக்கி செல்­வ­தற்கு நாம் ஒவ்­வொரு கணமும் பிரக்­ஞை­யுடன் செயற்­ப­டவும் விழிப்பு நிலையில் வாழவும் வேண்டும்.

ஆகவே பிரக்ஞை என்றால் என்ன, அதை எவ்­வாறு நம்மில் வளர்ப்­பது என்­பதை 'பிரக்ஞை ஓர் அறி­முகம்' என்ற நூல் ஒர­ள­வா­வது விளக்கும் என நம்­பு­கின்றேன். இதற்­கான அடிப்­படை பயிற்சி தியா­ன­மாகும்.

 தியானம் என்­பது வெறு­மனே சும்மா இருப்­ப­தல்ல. மாறாக அகம் நோக்கி பார்க்கும் பயிற்­சி­யாகும். இது­வ­ரை­யான நமது வாழ்வு முறை, வெளிநோக்கி பார்ப்­ப­தாக மட்­டுமே உள்­ளது. இதுவே சமூகம் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­களில் நமது பங்கு, பொறுப்பு என்ன என்­பதை புரிந்து கொள்ள முடி­யாத நிலையை உரு­வாக்­கு­கின்­றது.

சமூக இயக்­கத்தை வெளி­நோக்கி பார்க்கும் அதேவேளை நமது செயற்­பா­டு­களை சிந்­த­னை­களை அறி­வ­தற்கு அகம் நோக்கி பார்க்க பழக வேண்டும். இவை­யி­ரண்டும் சமாந்­த­ர­மாக நடை­பெறும் பொழுது சமூக மாற்றம் என்­பது சமாந்­த­ர­மாக நடை­பெ­றலாம்.

உங்­க­ளது கட்­டு­ரை­க­ளுக்கும் உங்­க­ளுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி குறிப்­பிட முடி­யுமா ?

எனது கட்­டு­ரை­க­ளுக்கும் எனது வாழ்­வுக்கும் இடையில் நிறைய தொடர்­புகள் உள்­ளன. எனது நூல்­களில் எழு­தி­யுள்ள கட்­டு­ரை­களை எனது அனு­ப­வத்­தி­லி­ருந்து ஆரம்­பித்து கோட்­பாட்டு சிந்­தாந்த பார்­வை­க­ளி­னூ­டாக பார்ப்­ப­தற்கு சிறிது சிறி­தா­கவே முயற்­சித்­தி­ருக்­கின்றேன்.

நான் எழு­து­வ­துடன் மட்டும் நிற்­ப­வ­னல்ல. எழு­து­ப­வற்றை எனது வாழ்வில் பரீட்­சித்து பார்ப்­ப­வன்­. இ­துவும் அவ­சி­ய­மான செயற்­பாடு என்றே கரு­து­கின்றேன். அவ்வாறு இல்லாவிடின் எனக்­கில்லை உப­தேசம் ஊருக்­கடி என்ற பழ­மொ­ழி­யா­கவே இருக்கும்.

 சிறு­கதை, கவிதை, கட்­டுரை, நாவல் ஆகி­ய­வற்றுள் எவ் வடி­வத்தின் தேவை அதிகம் உள்­ள­தென கரு­து­கின்­றீர்கள்?

ஒவ்­வொன்­றுக்கும் ஒவ்­வொரு பாத்­திரமும் பங்­க­ளிப்பும் உள்­ளது. ஓவ்­வொன்றும் ஒவ்­வொரு தளங்­களில் செயற்­ப­டு­வன. இவை எல்­லா­வற்­றி­னதும் கூட்­டுப்­பார்வை ஒரு சமூகம் தொடர்­பான ஒர­ளவு முழு­மை­யான பார்­வையைத் தரலாம்.

இருப்­பினும் சமூகம் தொடர்பாக நேரடியாக அறிவதற்கும் ஆய்வுசெய்வதற்கும் கட்டுரைகளே முக்கியமா னவை என கருதுகின்றேன். இதனால் மற்றவை முக்கியத்துவமற்றவை என்பத ல்ல. அவற்றின் பங்கு வேறு வகையானது.