You are here : Writers

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
‘இன்னும் பெயர் வைக்­கல ..வித்­தி­யா­ச­மான நூல் வெளி­யீட்டு நிகழ்வு

February 1, 2018


வித்­தி­யாசம் நாளுக்கு நாள் மாற்­ற­ம­டைந்து  கொண்­டி­ருக்­கின்­றது. ஏன் நமது கலை, இலக்­கிய நிகழ்­வு­க­ளிலும் ஏற்­ப­டக்­கூ­டாது?

 டன்ஸ்டன் மணியின் ‘இன்னும் பெயர் வைக்­கல’ நிகழ்வு அமைந்­ததை அறி­ய­ மு­டிந்­தது.  மரு­தானை தபா­லகக் கேட்­போர்­கூ­டத்தில் இவ்­வ­ளவு சிறப்­பாக  இந்­நி­கழ்வு அமைந்­ததன் பின்­ன­ணியில் டன்ஸ்­டனின் உழைப்பு இருக்­கி­றது. குறிப்­பிட்ட நேரத்தில் குறிப்­பிட்ட பேச்­சா­ளர்­களைக் கொண்டு  ‘வளா வளா’ இன்றி நிமிஷ உரை­களாய் அவை அமைந்­தன. இடைக்­கி­டையே நடனம், வீணை வாசிப்பு  என்­ப­னவும் இந்­நி­கழ்வில் உள்­ள­டங்கி இருந்­தது.  வர­வேற்­பு­ரை­யோடு நிகழ்ச்­சிக்குத் தொகுப்பை  பர­ணி­தரன் முரு­கேசு ஏற்­றி­ருந்தார்.

ஆரம்ப உரையை அள­வாக முன்­வைத்தார் ஹரேந்­திரன் கிருஷ்­ண­சாமி. புத்­த­கத்­துக்கும் தனக்­கு­முள்ள  தொடர்­பினை  இங்கு விளக்­கினார். இவர் ஒரு வளர்ந்து  வரும் ஊட­க­வி­ய­லாளர். இவர் பொழு­து­போ­காத நேரத்தில் டன்ஸ்டனால் எழு­தப்­பட்ட நூல் என்றார். 

ஊட­க­வி­ய­லாளர் திரு­மதி. உமா சந்­தி­ர­பி­ரகாஷ் கூறி­ய­தா­வது; “ வாழ்வு நிலையில், பல மனி­தர்­க­ளிடம்  மாற்­றங்­களைக் காணலாம். ஆனால், டன்ஸ்டன் அண்­ணா­விடம் மாற்­றங்­களை காண ­மு­டி­யாத ஒரே குண இயல்பில் இருக்­கிறார்.   என்றார்.

ரி.நிக்ஷனின்சிறப்­பு­ரையும் சிறந்து விளங்­கி­யது.    குறிப்­பிட்ட  சில எழுத்­தா­ளர்கள் மட்­டுமே நூல்­க­ளை வெளி­யிட்டு வந்­தார்கள். இன்று அப்­ப­டி­யல்­லவே சமூக  வலைத்­த­ளங்­களின் வளர்ச்­சியில் பல மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அதன் ஊடாக அனை­வரும்  கருத்­துக்­களை பகிர்ந்­து­கொள்­கி­றார்கள். சிறு­க­தை­க­ளாக சமூகம்  சார்ந்த விட­யங்­களை டன்ஸ்டன் மணி  எழு­தி­யுள்ளார். பல குரல்­களில் பேசக்­கூ­டிய ஆற்­றலும்  கொண்­டவர்.”

‘கோமாளி கிங்ஸ்’ என்ற வரப்­போகும் இலங்கைத் திரைப்­ப­டத்தைப் பற்­றிய ஒரு முன்­னோட்டம் இங்கு  திரையில் காண்­பிக்­கப்­பட்­டது. வெகு­வி­ரைவில்  (அநே­க­மாக பெப்­ர­வரி மாதம் எனலாம்) இது திரை­யி­டப்­ப­ட­வி­ருப்­ப­தாக கிங்ஸ் ரத்­தினம் மேடையில் தெரி­வித்து தனது மகிழ்வைப் பறி­மா­றிக்­கொண்டார். 

சுமார்  40 வரு­டங்­க­ளுக்கு முன்­வந்த ‘கோமா­ளிகள்’  போன்று இத்­தி­ரைப்­ப­டத்தை இலங்­கையில் நூறு  நாட்­களை நமது ரசி­கர்கள் ஓட­வைக்க வேண்டும்  எனவும் வேண்­டிக்­கொண்டார்.

சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் ராதா மேத்­தாவின்  தலை­மையில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந்­நி­கழ்­வுக்கு    அமைச்சர் மனோ­க­ணேசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

தலை­மை­யு­ரையில்  ராதா மேத்தா  கூறியதாவது, அன்று தமது புதிய அலை கலை­ வட்­டத்தில்  இணைந்து­கொண்டு செய­லாற்­றிய டன்ஸ்­டனைப் பற்றிப் புகழ்ந்­து­ரைத்தார். அவர் ஒரு சிறந்த  நடி­க­ரா­கவும் விளங்­கி­ய­தா­கவும் இங்கு கூறினார்.

நூல் ஆய்­வு­ரையை சிமாரா அலி நிகழ்த்­தினார். நூலின்  ஒவ்­வொரு தலைப்பும் வித்­தி­யா­ச­மாக உள்­ளது.  வலு­வான விட­யங்­க­ளைக்­கூட  நகைச்­சுவைப் போக்­காக கூறி­யுள்ளார். அவ­ருக்­கு­மி­கவும் பிடித்த ‘பிரி­யாணி’ பற்­றியும் இந்­நூலில் கதை­யாக்­கப்­பட்­டுள்­ளது.

ஆட்­டுக்­குட்­டியின் கதை  ஒன்றும் அரு­மை­யாக அமைந்­துள்­ளது என்றார்.  எனினும் ஆய்­வு­ரை­கூட அதி­க­நேரம் நீடிக்­காமல்  நிறுத்­தப்­பட்­டது. இன்னும் சிறிது ஆழ­மா­கப்­பேசியிருக்­கலாம்.

பிர­தம அதி­தி­யாக  கலந்து கொண்ட அமைச்சர்  மனோ­க­ணே­சனின் உரையில்,

“கொச்­சிக்­கடை என்­பது கொ ழும்புத் தமி­ழர்கள் அதி­க­மாக வாழ்­கின்ற தாயகம்  துணிச்­சல்­கூ­டவே பிறந்­த­தா­கவே இருக்கும்  குறும்­புத்­த­னங்­களை உடை­ய­வ­ரா­கவும்  சொல்­கி­றார்கள். தன்னை மகிழ்ச்­சி­யாக்கி சுற்று வட்­டத்­தையும் மகிழ்ச்­சி­யாக்­கு­வது அவ­ரது வேலை.

அவ­ரது அடை­யாளம்  கொச்­சிக்­க­டை­பற்றி  அர­சி­யலுக்கு வந்­த­பின்­னர்தான் தெரிந்து கொண்டேன்.  பல்­வேறு வீரக்­க­தை­களைப் படித்­தி­ருக்­கிறோம். அவை  படித்­தவை. இது நான் பார்த்­தவை.

டன்ஸ்­டனின்  கதை­க­ளிலும் இந்­தத்­தன்மை இருப்­ப­தாக அறி­கிறேன். அவரை வாழ்த்­து­கிறேன்.” என்றார்.

‘சின்ன சின்ன ஆசை’ நடனம் சிறப்­பாக இருந்­தது.  சுகன் நட­னக்­கு­ழு­வினர் மிகச்­சி­றப்­பாக நட­னங்­களை  அமைத்­தி­ருந்­தனர். இந்­நி­கழ்வில் முதல் பிர­தியை வழ­மைபோல் ‘புர­வலர் புத்­தகப் பூங்கா நிறு­வனர்’ ஹாசிம் உமர், அமைச்சர் மனோ­க­ணேசன் வெளி­யிட  பெற்­றுக்­கொண்டார்.

புதிய அலை கலை­வட்­டத்தின்  40 வருட ஞாபகார்த்த  விருதும் இங்கு வழங்கிவைக்கப்பட்டது.

பெருமளவில் ஊடகவியலாளர் கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.  நன்றியுரையை மணிராஜ் மாரி முத்து பகர்ந்தார்.  இறுதியாக சிற்
றுண்டியோடு நிகழ்வு முடிந்தது. ஆடல் அளவான உரை, திரைக் காட்சிகள் என்பனவற்றோடு  இனிய இலக்கிய நிகழ்வாய் நிறைவுதந்தது.