You are here : Writers

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
புனைவு எழுத்தில் ஒரு புதிய முயற்சி: பேராசிரியர் சிவலிங்கராஜா

March 13.2018


 18 ஆம் திகதி மாலை 3 மணிக்கு யாழ்.நாவலர் கலாசார மண்டபத்தில் பேராசிரியர் சிவலிங்கராஜா தலைமையில்  இந்நூலின் அறிமுகம் இடம்பெறும்.

யாழ். கைதடியைச் சோந்த ஆசி கந்தராஜா, அவுஸ்திரேலிய–ஈழத்து எழுத்தாளர், கல்வியியலாளர், பூங்கனியியல்–உயிரியல் தொழில்நுட்பத்துறைப் பேராசிரியர் என பன்முகம் கொண்டவர். ஜேர்மனி, ஜப்பான் மற்றும் அவுஸ் திரேலிய பல்கலைக்கழகங்களில் படித்தவர், பணிபுரிந்தவர்.

ஓய்வுநிலையில் இப்பொழுது தான் சார்ந்த துறையில் பல்கலைக்கழக பாடப் புத்தகங்களை ஆங்கிலத்திலும் புனைவு மற்றும் புனைவு இலக்கியங்களை தமிழிலிலும் எழுதிக்கொண்டிருக்கிறார். இவரது நூல்கள் சர்வதேச மட்டத்தில் பல விருதுகள் பெற்றுள்ளன.

''உயிரியல் விஞ்ஞானி, பேராசிரியர், நாடகக் கலைஞர், ஒலிபரப்பாளர் என ஆசி கந்தராஜாவின் பன்முகத்தன்மைகளை நானறிவேன்.

எழுதித்தான் பொருளோ புகழோ சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் அவருக்கில்லை. ஆனால் என் பார்வையில் அவர் விஸ்வரூபம் எடுத்து வியத்தகு மனிதராக விளங்குவது அவரது எழுத்துக்களின் மூலம்தான். காரணம் அந்த எழுத்துக்களில் ஒளிர்ந்து நிற்கும் உண்மை.

உண்மையைக் காணவும் உரைக்கவும் ஓர் உரம் வேண்டும். உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் என தெரியாமலா சொன்னான் பாரதி?'' என்று எழுத்தாளர் மாலன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

''ஆசி கந்தராஜா தனது புனைவுக் கட்டுரைகளில் இருவகையான பரிசோதனைகளை மேற்கொள்கின்றார். முதலாவது, உள்ளதை உள்ளபடி எழுதுவது.

மற்றையது உள்ளதை புனைவு சேர்த்து எழுதுவது. இதில் இரண்டாவது வகை, அவருக்கான இலாவகமான - வாகனமாக அமைந்து விடுகின்றது. அவரது முன்னைய 'கறுத்தக் கொழும்பான்’ புனைவு இலக்கியம் இதற்கு நல்ல உதாரணமாகும்.

இப்போது மீண்டும் 'செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்...!’ என்ற மகுடத்தில் தன் புலமைத்துவத்தையும் புனைவையும் ஒன்றாகக் குழைத்து நமக்குப் படையல் செய்திருக்கின்றார்''.

''ஆசி கந்தராஜா என்ற அறிவியல் அறிஞனின் ஆக்கங்கள் நமக்கு அவசியம் வேண்டுபவை. அவை அறிவியலை கூற முனைந்த போதும் அதனுள்ளே மொழி, பண்பாடு போன்ற விடயங்கள் தேங்கி நிற்கின்றன. அவை இலகுநடையில் நகைச்சுவை கலந்து விளங்கவைப்பவை.

அவற்றை வெறும் அறிவியலாகவோ புனைவாகவோ கொள்ள முடியவில்லை. இரண் டும் கலந்த கலவை. அறிவியல் உண்மைகளை, தான் சார்ந்த பண்பாட்டுக் கோலங்களை, மிக நுணுக்கமாகப் பயன்படுத்தி அந்த பண்பாட்
டிற்கேயுரிய மொழி வழக்குகளைச் சேகரம் செய்தும் பதிவிட்டும் தருகிற புதிய புனைவு உத்தி, இது புதிய வரவு.

தமிழுக்குக் கிடைத்தநன்கொடை. மாணவ சமூகநலன் கருதியும் பொதுவாசகனுக்கு அறிவூட்டுவது கருதியும் ஆசி கந்தராஜா தொடர்ந்து எழுதிக்குவிக்க வேண்டும் என்பது எனது அவா'' என பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் வ.மகேஸ்வரன், இந்த நூலுக்கான அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

'செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்' என்ற தொகுப்பில் இருக்கும் கட்டுரைகள் ஒரு இன்ப வாசிப்பு அனுபவத்தை எனக்குத் தந்தன.

புனைவுக் கட்டுரை என்ற வடிவில் அவர் தமது படைப்பிலக்கிய திறமையின் மூலம் தாவரஉலகம் சம்பந்தப்பட்ட விடயங்களை மிக சுவாரஸ்யமாக சொல்வதில் வெற்றிகண்டிருக் கிறார்.

பல அரிய  விவரங்களை வாழ்வியலோடு சம்பந்தப்படுத்தி வெகு யதார்த்த நடையில் வெளிப்படுத்தும் இக்கட்டுரைத் தொகுப்பு புனைவு எழுத்தில் ஒரு புதிய முயற்சி மட்டுமல்ல, பாராட்டப்பட வேண்டிய யுக்தியும் கூட.

அவரது இனிமையான யாழ்ப்பாணத் தமிழ் படிக்கும்போது கீதம் இசைக்கிறது. துள்ளும் நடையில், பேச்சு மொழியில் கதை பின்னும் பாணியில், நமக்குத் தெரியாத விடயங்களை கதையாடலில் கிண்டலும் ஹாஸ்யமும் கலந்து புகுத்தியிருப்பது மிகுந்த சுவார ஸ்யம்.

படிப்பவரை தூண்டில் போட்டு இழுப்பது ஆசிரியருக்குக்  கைவந்த சாகசம். அடர்ந்த எழுத்துக்குப் பழகிப்போன அறிவியல் வல்லு நர்கள், பாமரருக்கும் புரியும்படி எழுதுவது என் பது எளிதல்ல.

அதைத்தான் செய்திருக்கிறார் ஆசிகந்தராஜா. எல்லா தமிழ் பாடசாலைகளிலும் இப் புத்தகத்தைப் பாடமாக வைக்கவேண்டும். இன்றைய இளைஞர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் இது' என்கிறார் இந்தியாவின் பிரபல எழுத்தாளர் வாஸந்தி.

'ஈழத்துச் சஞ்சிகை வரலாற்றில் புனைவுக் கட்டுரை என்ற வகைமையை அறிமுகம்செய்த பெருமையை ஞானம் சஞ்சிகைக்கு அளித்ததோடு தமிழின் உலகத்தரமான சில சிறுகதை களை ஞானம் சஞ்சிகையில் எழுதி சஞ்சிகையின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியவர் ஆசி கந்தராஜா.

அவரது இப் புனைவுக்கட்டுரைத் தொகுப்பினை ஞானம் பதிப்பகத்தினூடாக வெளிக்கொணர்வதில் நாம் பெருமையடை கிறோம். தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், இலக்கிய வாதிகள் அனைவரும் விழாவுக்கு வருகை தந்து சிறப்பிக்கவேண்டும் என ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் பதிப்பாளருமான டாக்டர் ஞானசேகரன் வேண்டு கோள் விடுத்துள்ளா