You are here : Writers

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
எழுத்தாளர் ஏர்­வாடி எஸ்.இரா­தா­கி­ருஷ்ணன்.

April 10.2018


வி­ய­ரங்க மேடை­களில் உற்­சா­க­மாக வலம் வரு­பவர் ஏர்­வாடி எஸ்.இரா­தா­கி­ருஷ்ணன். எழுதத் தொடங்­கிய காலம் முதல் இன்று வரை கவிதை, சிறு­கதை, கட்­டுரை என இடை­வி­டாமல் எழுதி வரு­பவர்.

நூறு நூல்­களைக் கடந்தும் சோர்­வின்றி எழுத்தில் இயங்கி வரு­கிறார். கவி­ஞர்­களை ஒன்­றி­ணைக்கும் பால­மான ‘கவிதை உறவு’ அமைப்பை 46 ஆண்­டு­க­ளாக நடத்தி வரு­பவர். எழு­பது அக­வை­யிலும் உற்­சா­க­மாக தமிழ்ப்  பணி­யாற்­றி­வரும் இவரை அண்­மையில் சந்­தித்தோம்.

உங்­க­ளுக்குள் கவிஞன் எப்­போது வெளிப்­பட்டான்?

நான் ஏர்­வா­டியில் பிறந்து பாட­சாலைக் கல்­வியை அங்­கேயும் கல்­லூரிப் படிப்பை பாளை­யங்­கோட்டை யிலும் முடித்­தவன். கல்­லூ­ரியில் நான் படித்­த­போது தமி­ழி­லக்­கி­யத்தைக் கூட ஆங்­கி­லத்தில் தான் நடத்­து­வார்கள். தூய யோவான் கல்­லூ­ரியில் படித்த போது அதன் முதல்வர் வேத சிரோன்­ம­ணியும் தமி­ழா­சி­ரியர் பாக்­கி­ய­முத்­துவும் என்னை ஊக்­கப்­ப­டுத்­தினர்.

எனக்கு சிறு வய­தி­லி­ருந்தே கண்­ண­தா­சனைப் பிடிக்கும். அவ­ரது எழுத்து மீது தீராத மயக்­க­முண்டு. அதன் ஓசை­ந­யத்தில் இல­யிப்பேன். கல்­லூ­ரியில் கட்­டுரைப் போட்­டிக்­கான தலைப்­பு­களில் மற்ற வர்கள் மறைந்த பாரதி, பார­தி­தாசன், கம்பர் போன்ற கவி­ஞர்கள் பற்றி எழு­தி­னார்கள். நான் கண்­ண­தாசன் பற்றி எழு­தினேன். லால்­ப­கதூர் சாஸ்­திரி மறைந்த போது நான் ஒரு கவி­தை­யெ­ழு­தினேன். அந்த இரங்­கற்பா கல்­லூரி ஆண்டு மலரில் வெளி­யா­னது. அதுதான் எனது முதல் கவிதை. அதன் பின் ஆயி­ரக்­க­ணக்கில் எழுதி விட்டேன்.

கவிதை எப்­படி இருக்­க­வேண்டும்?

கவி­தையில் சொற்­சி­லம்­பமோ வார்த்தை ஜாலமோ செயற்­கைப்­பூச்­சு­களோ முக்­கி­ய­மில்லை. உணர்வு தான் முக்­கியம். கவி­தை
யில் சரி­யான உணர்வு வெளிப்­படும் போது அது தனக்­கான சொற்
­களைத் தேடிக் கொள்ளும். வடி­வத்­திற்கு அப்­பாற்­பட்
­டது தான் கவிதை.

ஒரு கவி­ஞ­ராக உங்கள் ஈடு­பாடு எப்­படி வளர்ந்­தது?

நான் இளங்­கலை பட்டம் முடித்­ததும் அர­சு­ட­மையாக்­கப்­பட்ட வங்­கி­யொன்றில் வேலை கிடைத்­தது. வங்கிப் பணிக்கு வந்த பிறகு தான் எழுத்துப் பணி
யைத் தொடர்ந்தேன். அகில இந்­திய வானொ லியில் ஏரா­ள­மான இசைப்­பா­டல்­களை எழுதி யிருக்­கிறேன்.

அப்­போ­தெல்லாம் நானும் வைரமுத்­துவும் ஒரே நேரத்தில் வானொ­லியில் இடம்­பெ­றுவோம். நான் இசைப்­பாடல் வழங்­கவும் அவர் கவிதை வழங்­கவும் போவோம். அனைத்து பிர­பல கவி­ஞர்கள் தலை­மை­யிலும் ஏரா­ள­மான கவி­ய­ரங்­கு­களில் பாடி­யுள்ளேன். கவிக்கோ அப்துல் ரஹ்மான், வாலி, புல­மைப்­பித்தன் போன்ற­வர்­க­ளுடன் மேடை­யே­றி­ய­மையை மறக்க முடி­யாது.

நான் திரைப்­ப­டத்­திற்கும் பாடல் எழு­தி­யிருக் கிறேன். என்னை பாடல் எழு­த­வைத்­தவர் கவி யரசர் கண்­ண­தாசன் தான் என்றால் யாரும் நம்ப மாட்­டார்கள். ‘ஆனந்த பைரவி’ என்ற படத்தில் இசை­ய­மைப்­பாளர் இரா­மா­னுஜம் இசையில் என்னை பாடல் எழுத வைத்தார்.

இசை­ய­மைப்­பா­ள­ருக்கு எம்மேல் நம்­பிக்கை வர­வில்லை. ஏர்­வாடி தான் எழு­த­வேண்டும் என்று பல­மாக சிபா­ரிசு செய்து எழுத வைத்தார் கவி­ய­ரசர். ‘உமை­ய­வளே..’ எனத் தொடங்கும் பக்­திப்­பாடல் அது. அதன பிறகு ஏழெட்டு திரைப்­ப­டங்­க­ளுக்கு பாடல்கள் எழு­தினேன்.

எனது முதல் நூலை கண்­ண­தாசன் தான் வெளி­யிட்டார். அவர் என்­மீது கொண்ட அன்பு பெரிது. நான் சினி­மாவில் ‘உனக்­காக ஒரு பாடல்’ என்­றொரு பாடல் எழு­தினேன். அதனைப் பார்த்­து­விட்டு அதே தலைப்பில் அச்­சிட்டு வைத்­தி­ருந்த தம்­மு­டைய புத்த கத்தின்  தலைப்­பையே மாற்­றினார் கண்­ண­தாசன்.

இலக்­கியப் பணிக்கு எவ்­வி­தத்தில் வங்கிப் பணி பல­மா­கவும் பல­வீ­ன­மா­கவும் இருந்­தது?

நான் வேலை வேறு, விருப்பம் வேறு என்­பதில் தெளி­வாக இருந்தேன். நான் வங்­கி­யிலும் பண்பு நல­னுள்ள அலு­வ­ல­ரா­கவே பணி­செய்தேன். எனக்கு கிடைத்த பெரு­மைகள் எல்லாம் நல்ல எழுத்­தாளர் என்­பதால் அல்ல. நல்­ல­வ­னாக உள்ள எழுத்­தாளர் என்­பதால் தான் என்று கரு­து­கிறேன். 1982 ஆம் ஆண்டு உலகக் கவி­ஞர்கள் மாநாடு அமெ­ரிக்­காவில் நடந்­தது. அதில் கலந்­து­கொள்ள கண்­ண­தாசன், புதுக்­கல்­லூரி பேரா­சி­ரியர் அமி­ருதி, ஜஸ்டிஸ் மோகன் ஆகி­யோ­ருடன் எனக்கும் அழைப்பு வந்­தது. அதற்­காக வங்கித் தலை­மைக்கு கடி­த­மெ­ழு­தினேன்.

உல­கப்­போட்­டி­களில் கலந்­து­கொள்ள வெளி­நாடு செல்லும் விளை­யாட்டு வீரர்­களை நிறு­வ­னங்கள் ஊக்­கு­வித்து விளம்­பரம் தேடு­கின்­றன. அதைப்போல் என்­னையும் கலந்­துகொள்ள அனு­ம­தி­யுங்கள். அதன்­மூலம் விளம்­பர மும் கிடைக்கும் என்று எழு­தி­ய­வுடன் அதற்கு அனு­ம­தி­ய­ளித்து சென்று வரு­வ­தற்­கான பயணக் கட்­டண தொகை­யையும் வங்­கித்­த­லைமை ஏற்­றுக்­கொண்­டது.

அதற்­காக ஒரு மாத­கால விடுப்பும் கொடுத்­தது. என் எழுத்­தார்­வத்தை வளர்த்­த­வர்கள் பலர். அவர்­களில் விக்­ரமன் முதன்­மை­யா­னவர். முதலில் கோமகள் இதழில் எழு­தினேன். பிறகு அமு­த­சு­ரபி, கலை­மகள் என வளர்ந்தேன். நான் 41 வய­தி­லேயே கலை­மா­மணி விருது பெற்றேன்.

இன்­றைய கவி­தைகள் குறித்து..?

நம்­பிக்கை தரக்­கூ­டிய ஏரா­ள­மான இளம் கவி­ஞர்கள் தற்­போது வீரியம் குறை­யாமல் எழுதி வரு­கி­றார்கள். அதே­நேரம் போலி­களும் செறிவோ திரட்­சியோ இல்­லாத கவி­தை­களும் வரு­கின்­றன. இவை காலத்தால் அழிந்­து­விடும். இத்­த­கைய தரம் குறைந்த கவி­தைகள் பற்றி கவிஞர் வலம்­புரி ஜான், ‘இவர்கள் காகி­தத்தை களங்­கப்­ப­டுத்­து­கி­றார்கள்’ என்று குற்றம் சுமத்தும் தொனியில் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். இருப்­பினும்  தமிழில் இதி­காச தர­முள்ள கவிதைப் படைப்­புகள் வர­வில்­லையோ என்­கிற ஏக்கம் எனக்குள்  உண்டு.

கவிதை உறவு என்­பதன் தொடக்­கப்­புள்ளி எது?

ஒரு காலத்தில் பார­தி­யாரை சில கவி­ஞர்கள் தூக்கிப் பிடித்­தனர். பாரதி சார்ந்து சில குழுக்கள் இயங்­கின. அதேபோல் பாவேந்­தரை உயர்த்திப் பிடித்து சில குழுக்கள் இயங்­கின. அவற்றின் பின்
­ன­ணியில் சமூகப் பார்­வையும் இருந்­தது. சாதி, சமய உணர்வு கடந்த அந்த இரு பெருங்­க­வி­ஞர்­களின் பெயரில் சாதி சார்ந்து பிரிந்து கிடந்­தனர் கவி­ஞர்கள். இதை எண்ணி எனக்கு வருத்­தமும் இருந்­தது. எல்­லா­வற்­றையும் ஒன்­றி­ணைக்க பல­ரது விருப்­பத்தில் நான் எடுத்த முயற்சி தான்  18.05.1972 அன்று தொடங்­கப்­பட்ட ‘கவிதை உறவு’ இயக்கம். இதற்­கென இதழ் ஒன்­றையும் 1987 ஆம் ஆண்டு தொடங்­கினோம். இது­வரை 31 ஆண்­டு­க­ளாக ஒரு இதழ் கூட நின்­ற­தில்லை. மறைந்த நா.முத்­துக்­குமார், விவேகா, தமி­ழ­முதன் போன்­ற­வர்கள் கவிதை உறவு கவி­ய­ரங்கில் கவிதை பாடி­ய­வர்­களே.

உங்­க­ளுக்­கான அங்­கீ­காரம் பற்றி..?

எனக்கு பல்­வேறு விரு­து­களும் பெரு­மை­களும் கிடைத்­தி­ருக்­கின்­றன. அவை என் உணர்­வுச்­சூ­ழ­லுக்­காக கிடைத்­த­வையே தவிர படைப்­புச்­சூ­ழ­லுக்
­காக அல்ல என்பேன். நான் எந்த சித்­தாந்த அர­சியல் சார்பும் இல்­லா­தவன். நூற்­றுக்கும் அதி­க­மான நூல்கள், 500 இற்கும் மேற்­பட்ட வானொலி மற்றும் தொலைக்­காட்சி நாட­கங்கள், 3 மேடை நாட­கங்கள், தொலைக்­காட்­சித்­தொ­டர்கள், குறும்­ப­டங்கள் என எனது பங்­க­ளிப்பைப் பட்­டி­ய­லி­டலாம்.

எனது படைப்­பு­களை ஆய்வு செய்து 7பேர் எம்.ஃபில் பட்­டமும் 4பேர் கலா­நிதி (பி.ஹெச்.டி) பட்­டமும் பெற்­றி­ருக்­கி­றார்கள். எனது கவி­தைகள் பல பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பாடங்­க­ளா­கி­யி­ருக்­கின்­றன, தமி­ழக அரசின் கலை­மா­மணி விருது, பார­தி­தாசன் விருது, தமிழ் வளர்ச்­சித்­து­றையின் பரிசு இரு­முறை என எனக்­கான அங்­கீ­கா­ரங்கள் சரி­யான வகையில் கிடைத்­தி­ருக்­கின்­றன.

புலம்­பெ­யர்ந்து வாழும் தமி­ழர்­களின் தமிழ் சார்ந்த பார்வை எப்­ப­டி­யுள்­ளது?

நான் உலகின் பல நாடு­க­ளுக்கும் இலக்­கிய விழாக்­களில் கலந்­துெ­காள்ளச் சென்­ற­துண்டு. பெரும்­பா­லான நாடு­களில் இலங்கைத்  தமி­ழர்கள் எனக்கு நண்­பர்­க­ளாக இருக்­கி­றார்கள். அவர்கள் தங்­களால் முடிந்த அள­விற்கு தமிழ்­மொ­ழிக்கு தொண்டு செய்து வருகி றார்கள். மொழி வளர்ச்­சிக்­காக அவர்­களின் முன்­னெடுப்பு எப்­போதும் என்னை வியப்­பூட்டி மகி­ழ­வைக்கும்.

பகிர்ந்து கொள்ள விரும்பும் விடயம்?

நான் என்னை எப்­போதும் உற்­சா­க­மாக வைத்துக் கொள்­பவன். வங்கி எனக்கு ஜீவனம். வளர்தமிழ் எனக்கு ஜீவன் என்றிருந்தவன். எனக்கு மிகப்பெரிய பொருளாதாரக் கனவுகளோ ஆசைகளோ இருந்த தில்லை. கிடைத்ததை மகிழ்ச்சியுடன் ஏற்பவன். மனி தர்களையும் மனித உணர்வுகளையும் மதிப்பவன். நான் எப்போதும் ஒரு நல்ல ரசிகனாக இருக்க விரும்
புபவன். நான் எனது வாழ்க்கையில் மூன்று A க்களை பின்பற்றுகிறேன்.

அவையாவன Acceptability (எதையும் ஏற்றுக்கொள்ளுதல்), Adaptability (எதனுடனும் பொருந்திப் போதல்), Accessibility (தேடக் கிடைக்கும் எளிமை). இம்மூன்றையும் யார் பின்பற்றினாலும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதே எனது அவதானிப்பு. இதுவே நான் பகிர்ந்து கொள்ளும் முத்தாய்ப்பு.