You are here : Writers

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




எழுத்தாளர் 'நஜ்முல் ஹுசைனின்இரு நூல்­களின் வெளி­யீட்டு விழா

April 24.2018


எழுத்தாளர் ''நஜ்முல் ஹுசைனின் நட்­சத்­திரக் கவி­தைகள்," ''இனிவரும் நாட்கலெல்லாம்" ஆகிய இரு நூல்­களின் வெளி­யீட்டு விழா  ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய கலை இலக்­கிய மன்ற ஏற்­பாட்டில் கொழும்பு மெசஞ்சர் வீதி, பிைரட்டன் ரெஸ்ட் அரங்கில்  கடந்த  ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

மன்றத் தலைவர் தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலை­மையில் நடை­பெற்ற இந்நிகழ்வில் ''இனிவரும் நாட்கலெல்லாம்" நூலின் முதல் பிரதியை பிரதம அதிதி பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயிலிடமிருந்து அப்துல்லாஹ் இன்டஸ்ட்ரீஸ் நிர்வாகப் பணிப்பாளர்   ஹசன் முபாரக் ,  நூலாசிரியர் மற்றும் மன்றத் தலைவர் தமிழ்த்தென்றல் அலி அக்பர் ஆகியோர்  முன்னிலையில் பெற்றுக்கொள்வதையும் ''நஜ்முல்
ஹுசைனின் நட்சத்திரக் கவிதைகள்'' நூலின் முதல்பிரதியை சூட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பணிப் பாளர் எம்.ஜீ.எச். அக்ரம்,  நூலின் தொகுப்பாசிரியர் நூருல் அயின் மற்றும் நஜ்முல் ஹுசைன் ஆகியோர் முன்னிலையில் பெற்றுக்கொள்வதையும் படங்களில் காணலாம்.

நூலாசிரியரின் மகளும் சட்ட உதவி ஆணைக்குழு சட்ட அதிகாரியும் சட்டத்தரணியுமான நூருல் ஷப்னா சிராஜுதீன் வாழ்த்துக்கவிதை வாசிப் பதையும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.