You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07

October 01, 2014


முதலாம், இரண்டாம் உலக யுத்த காலத்தில் எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடிய போதிலும் நெடுந்தீவக மக்கள் எந்தவிதமான உணவு குக்ஷ்த்த நெருக்கடிகளுக்கும் முகம்கொடுக்காமல் தமது ஜீவாதாரத்தை மேற்கொண்டிருந்தனர் என்ற குறிப்புக்கள் காணப்படுகின்றன. பால், மீன், தெங்குப் பொருட்கள், பனம்பொருட்கள், சிறுதானியங்கள் போன்றவை இங்கு நிறைவாக உற்பத்தியாகின்றன.                                                                                                                                                                                                                                                      மக்களின் பாவனைக்கு மேலதிகமான பொருட்கள் இலங்கையின் பல பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப் பட்டு விற்பனை செய்யப்பட்டு வருமானமீட்டப்பட்டதாக இங்குள்ள முதியவர்கள் குறிப்பிடுகிறார்கள். நெடுந்தீவின் மேற்கு, கிழக்குப் பகுதிகளில் சிறிய அடிப்படையில் வீட்டுத் தோட்டங்கள் காணப்படுகின்றன. மிளகாய், வெங்காயம், கத்தரி, வெண்டி, பயிற்றங்காய் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வாறு நெடுந்தீவின் வருவாய் தரும் தொழில்துறைகள் குறித்து இக்கட்டுரை ஆராய்கின்றது.