You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08

October 13, 2014


நெடுந்தீவின் பிராதான வருமானம் தரும் தொழிலாக மீன்பிடித்தொழில் காணப்படுகின்றது. மீன்பிடித் தொழிலுக்கு ஏற்ற சூழல்காரணிகளே இதற்கான காரணமாகும். இத்தீவின் கிழக்கு, மேற்குத்துறைகளே நீண்டகால மீன்பிடித்துறைகளாகக் காணப்படுகின்றன. ஆரம்ப காலம் முதல் பல்வகையான மீன்பிடி முறைகள் காணப்பட்டாலும் , தற்போது கட்டுமரம், மீன்பிடி வள்ளங்கள், பிளாஸ்டிக் வள்ளங்கள் போன்ற முறைகளே அதிகம் கையாளப்பட்டு வருகின்றன.
   à®¨à¯†à®Ÿà¯à®¨à¯à®¤à¯€à®µà¯ மீனவர்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளாக, இந்திய மீனவர்களினால் இழுத்துச் செல்லப்படும் பெறுமதி மிக்க கரைவலைகள், அரசினால் ஊக்குவிப்புக்கள் வழங்கப்படாமை, சந்தை வாய்ப்பின்மை போன்றவற்றை கூறலாம்.  à®…த்தோடு  à®‡à®™à¯à®•à¯ கட்டாந்தரைகளாகக் காணப்படும் நிலமானது,  à®†à®Ÿà¯ வளர்ப்பிற்கு பொருத்தமாக இருப்பதனால், விலங்கு வேளாண்மையும் இங்கு இடம்பெற்று வருகிறது.  à®‡à®™à¯à®•à¯à®³à¯à®³ கட்டாந்தரைகளிலுள்ள மூலிகை வகைகளை உணவாக உட்கொண்டு வளரும் ஆடுகளின் இறைச்சி சுவைமிக்கது.
   à®‡à®™à¯à®•à¯ ஆட்டிறைச்சி, கருவாடு போன்றவற்றிற்கான கேள்வி அதிகமாகையால், பொருத்தமான ஊக்குவிப்புக்களை வழங்குவதன் மூலம் நெடுந்தீவு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் அதேவேளை பொருளாதார அபிவிருத்தியும் ஏற்படும். மேலும் நெடுந்தீவின் சிறப்புக்கள் குறித்து, முன்னாள் கொழும்பு றோயல் கல்லூரி  à®ªà®¿à®°à®¤à®¿ அதிபர், மா. கணபதிப்பிள்ளை அவர்களின் கட்டுரையை படிப்பதற்கு.....