You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




‘உப்பு நகரம்’ புத்தளம்

October 15, 2014


புத்தளம் இலங்கையின் நுழைவாயிலாகத் திகழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க ஒரு  பிரதேசமாகும். இதற்குச் சான்றாக  விஜயன் காலம் முதல் ஐரோப்பியர் காலம் வரை உள்ள வரலாறுகள் காணக்கிடைக்கின்றன. இங்கு இன ஐக்கியம் பேணப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும். இங்குள்ள சூழல் சுற்றாடல் மற்றும் குறைந்த வாழ்க்கை செலவு போன்ற காரணிகளால் வடபுலத்திலிருந்தும் இங்கு நிரந்தர குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நகரில் உள்ள அநுராதபுர வீதியை ‘சின்ன யாழ்ப்பாணம்’ எனவும் அழைப்பர். மேலும் ‘புத்தளம் பெரிய பள்ளிவாசல்’ அந்நகருக்கு மேலும் எழில் சேர்க்கின்றது.                                                                                                                                                                                           கண்டி மன்னராட்சி காலத்தில் மன்னரால் வழங்கப்பட்ட சில பொருட்களும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு 1902 ஆம் ஆண்டு வில்பத்து சரணாலயம் அமைக்கப்பட்டது. ஒல்லாந்தர் கி.பி 1766 களில் அகழிகளுடன் மண் கோட்டை ஒன்றையும்  கட்டினர். இங்கு மக்களின் அதிகரித்த குடிபெயர்வினால் பொருளாதாரமும் விருத்தி கண்டது. பின் நாளடைவில் நகர அபிவிருத்தியின் காரணமாக இன்று இது ‘போர்ட்றோட்’ என அழைக்கப்படுகின்றது.         முஸ்லிம், தமிழ், சிங்கள மக்களை வாழ வைக்கும் இப்புண்ணிய பூமியானது சகோதரத்துவ வாழ்க்கை முறையைக் கொண்ட பொருளாராத விருத்தி மிக்க ஒரு பிரதேசமாக விளங்குகிறது.