You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




தஞ்சை பெரிய கோவிலுக்கு வருபவரை வரவேற்க மீண்டும் வருகிறார் . ராஜ ராஜ சோழன்

2018-07-5


தஞ்சை பெரிய கோவிலை கட்டி கும்பாபிஷேகம் செய்தபோது, கோவிலில் உள்ள பெருவுடையார் என்ற சிவபெருமானை நோக்கி கும்பிடுவது போல 74 சென்டிமீட்டர் உயரமான ராஜ ராஜ சோழனின் தங்கச்சிலையும் 53 சென்டிமீட்டர் உயரமான லோகமாதேவியின் தங்கச்சிலையும் இருந்தன.

ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டி குடமுழுக்கு நடத்தியபோது, ராஜராஜனின் படைத் தளபதியான சேனாதிபதி மும்முடிச் சோழ பிரம்மராயன் என்பவரால், இந்த இரு சிலைகள் உருவாக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. இந்த சிலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.150 கோடி ஆகும்

ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த இந்த தங்கச்சிலைகள் 1900ஆம் ஆண்டு வரை கோவிலில் இருந்தது. அதன்பின்னர், அந்த சிலைகள் மர்மநபர்களால் திருடப்பட்டுவிட்டது.

ராஜராஜ சோழன் உயிருடன் இருக்கும் போதே செய்யப்பட்ட இச்சிலைகள் இப்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கெளதம் சாராபாய் தனியார் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நீண்ட ஆண்டுகளாக பலரது வேண்டுகோள்கள், பலரது முயற்சிகள், வரலாற்று ஆய்வாளார்கள், பக்தர்கள் இடைவிடாத கோரிக்கைகள் என பலரின் முயற்சியினாலும் பொன்மாணிக்கவேல் அவர்களின் கடும் நடவடிக்கையால், இதோ ராஜராஐ சோழன் லோகமாதேவி இருவரும் தமிழகத்திற்கு 60 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு வந்துள்ளார்கள்.