2018-07-18
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ளது ஹம்பி எனும் அழகிய கிராமம். இவ் ஊரில் தான் மர்மங்களின் உறைவிடமான ஈசனின் விருபாட்சர் ஆலயம் அமைந்துள்ளது. இவ் ஆலயம் தென்னிந்தியர்களின் கட்டடக்கலையில் உருவான பொக்கிஷம். மேலும் இவ் ஆலயத்தில் விஞ்ஞானமே வியந்து நிற்கும் மர்மங்களும் பல உள்ளன. இத் திரு கோயில் ஹொய்சாலா வம்சத்தினரால் கட்டப்பட்டு விஜயநகர பேரரசால் பராமரிக்கப்பட்டு வந்ததாக அறிய முடிகின்றது.
இவ் ஆலய கோபுரத்தின் நிழல் கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் ரங்க மண்டபத்தில் இருக்கும் சுவரில் தலைகீழாக விழும் மர்மம் விஞ்ஞானிகள் உற்பட அனைவரையும் ஆச்சரியத்தில் உறையவைக்கும் உண்மையாகும். இதற்கான காரணம் இன்றுவரை எவராலும் கண்டுபிடிக்க முடியாமல் புரியாத புதிராகவே விளங்குகிறது
கோயிலின் நிழல் தலைகீழாக விழுவது இறைவனின் அருள் என்று பக்தர்களும், கட்டடக்கலையின் நுட்பம் என்று அறிவியலாளர்களும் காலங்காலமாக விவாதித்து வருகின்றனர். இதில் எதுமே இதுவரை நிரூபிக்கக்படவில்லை என்பதே உண்மை.
அந்நிய படையெடுப்புகளின்போது இந்த நகரமே அழிந்தபோதும் இந்த கோயில் மட்டும் எந்த பாதிப்புமின்றி கம்பீரமாக காட்சி தருகிறமை இவ் ஆலயத்தின் சிறப்பை மேலும் உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றது.