You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கோயிலை காவல் காக்கும் சைவ முதலை - 150 ஆண்டுகளுக்கு மேல் நடக்கும் அதிசயம் !

2018-07-24


ஒவ்வொரு கோயில்களுக்கும் ஒரு தனி சிறப்பு இருக்கின்றது. அந்த சிறப்பு ஆலய இறைவனின்பெருமையை காட்டுகின்றதாக அமையும். 
அந்த வகையில் கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள அனந்தபுரா கோயிலின் இறைவனின் புகழைஉணர்த்தும் நிகழ்வு இன்றும் நடக்கின்றது. 
இந்த கோயில் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அனந்த பத்பநாப சுவாமியின் மூலஸ்தானமாகக்கருதப்படுகிறது. அத்தோடு பிரதான கோயிலைச் சுற்றி தலைவாயில் ஒன்றும் இங்குஅமைக்கப்பட்டுள்ளது. 
பச்சை நிறத்தில் காட்சி தரும் இந்தக் கோயில் குளத்தில் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக முதலைஒன்று வாழ்ந்து வருகிறது. இதை அங்குள்ள மக்கள் பபியா எனப் பெயரிட்டு அழைக்கிறார்கள். இந்தமுதலை கோயிலின் பாதுகாவலராகக் கருதப்படுவதோடு, பக்தர்களால் மிகவும் மதிக்கப்படுகிறது. 
இந்த முதலை இறந்து போனாலும், அதன் இடத்தில் கோயிலை பாதுகாக்க மற்றொரு முதலை இந்த ஏரிக்குவரும் என்றும் நம்பப்படுகிறது. 
இங்கு என்ன அதிசயம் என்றால், பொதுவாக முதலைகள் அசைவ வகையைச் சார்ந்தவை ஆனால், இந்தமுதலையோ குளத்தில் உள்ள மீன்களைக்கூடச் சாப்பிடுவதில்லையாம். 
இந்த முதலை கோயில் குருக்களால் உச்சிக்கால பூஜையின் போது சாதம் வெல்லம் கலந்தஉருண்டைகளாக கொடுக்கப்படும் முசலி எனப்படும் நைவேத்தியத்தையே உண்கின்றதாம். சரியாகபிரசாதம் வழங்கப்படும் வேளைகளில் இந்த முதலை குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்து விடுகிறதாம். 
கோயில் குளத்தில் குளிக்க வரும் பக்தர்கள் மற்றும் குருக்கள்களை இதுவரை பபியா தாக்கியதில்லைஎன்பதும் குறிப்பிடத்தக்கது.