You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நூறு வருடங்களாக மழையை முன்னறிவிப்பு செய்யும் அதிசய ஆலயம்

2018-08-01


இந்தியாவின் உத்தரபிரதேசம் கான்பூர், பிதார்கவான் பெஹதா என்ற இடத்தில் உள்ளது ஜகன்னாதர் ஆலயம். இந்தக் கோவிலை ‘மழைக்கோவில்’ என்றும் அழைக்கிறார்கள்.


மழைக்கோவில் :
ஒரு வருடத்தில் பெய்யும் மழை பற்றிய தகவலை முன்கூட்டியே குறிப்பிடும் சிறப்பை கொண்டதால் இவ் ஆலயம் மழைக்கோவில் என அழைக்கப்படுகின்றது.
எந்த ஒர சிறப்பு வழிபாடும்  இல்லாமல், இவ் ஆலயம்  மூலம் அறியப்படும் மழை பெய்வது பற்றிய குறிப்புகள், அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. இவ் ஆலயத்தின் குறிப்பை கொண்டே இப்பகுதியில் வாழும் விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.


மழைக்கான முன்னறிவுப்புகள் :


ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் நடை பெறும் தேர்த்திருவிழா சமயத்தில், கோவிலின் மேற்கூரையில் நீர்த்துளிகள் உருவாகும் விதத்தைக் கணக்கில் கொண்டு அந்த வருடத்தின் மழைப்பொழிவு எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்துகொள்கிறார்கள்.


தேர்த்திருவிழா சமயத்தில் கோவிலின் மேற்கூரையில் வெறும் ஈரப்பதம் மட்டும் இருந்தால், மழையின் அளவு சாதாரணமாக இருக்கும் என்றும், நீர்த்திவலைகள் உருவாகி நின்றால் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்றும், நீர்த்திவலைகள் உருவாகி கீழே சொட்டுச்சொட்டாக விழுந்தால் அந்த வருடத்தில் பெரும் மழை பெய்யும் என்றும் அப் பகுதி மக்களால் கணக்கிடுகின்றனர். இதில் உள்ள அதிசயம் என்னவென்றால், கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக அந்த நம்பிக்கைக்கு மாறாக மழையின் பெய்யவில்லை என்பது தான். இதனை அந்தப் பகுதியில் உள்ள மக்களும், கோவிலில் பூஜை செய்பவர்களும் குறிப்பிடுகிறார்கள்.


ஈரப்பதம் அல்லது நீர்த்திவலைகள் ஏதும் தோன்றவில்லை என்றால் அந்த வருடத்தில் மழை இருக்காது என்பதும் ஆச்சரியமான நடப்பாக இருந்து வருகிறது. பொதுவாக, மழை பெய்வதற்கு ஒரு வாரம் முன்பாகவே மேற்கண்ட அறிகுறிகள் தென்படத் தொடங்குமாம்.

மின்காந்த சக்தியுள்ள சக்கரம் :
அந்த கோவிலில் கடந்த ஏழு தலைமுறைகளாக பூஜையில் ஈடுபட்டு வரும் தலைமை பூசாரியான தினேஷ் சுக்லா என்பவர் குறிப்பிடும்போது, அசோகர் காலத்தில் ஸ்தூபி வடிவத்தில் இந்த கோவில் வடிவமைக்கப்பட்டது. இது போன்ற அமைப்பு இப்பகுதியில் வேறு எங்கும் இல்லை. அதோடு, கோவிலின் மேற் கூரையில் உள்ள சக்கர வடிவ அமைப்பில் மின்காந்த சக்தி இருப்பதால், மழைக்காலங்களில் ஏற்படும் இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றங்களால் ஒருவர் கூட பாதிக்கப்பட்டதில்லை’ என்கிறார்.

வித்தியாசமான கட்டமைப்பு கொண்ட இந்த மழைக்கோவில், இப்போது அந்த மாநில தொல்பொருள் பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அதன் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பலரும் கோவிலின் மேற்கூரையில் உருவாகும் நீர்த்திவலைகளுக்கான அறிவியல் பூர்வமான காரணத்தை அறிய முயற்சிகள் மேற்கொண்டார்கள். ஆனால், இதுவரையில் யாராலும் அதுபற்றிய மர்மத்தை கண்டறிய இயலவில்லை.