You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




வற்றாப்பளை கண்ணகி அம்மனின் அற்புதம் - திருடனை வழிமறித்த மூதாட்டி

2018-08-05


முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளைக் கிராமத்தில் எழுந்தருளி உள்ள கண்ணகி அம்மன் ஆலயம் வன்னி மன்னர்களால் பரிபாலிக்கப்பட்டு வந்த மிகவும் பழமையான வரலாற்றினை கொண்ட ஆலயமாகும்.


போர்த்துக்கேய தளபதியாகிய நெவில் என்பவன் இவ் ஆலயத்தை அழிக்க முற்பட்ட போது ஆலயத்தில் நின்ற பன்னிச்சை மரம் தனது காய்களை வீசி ஆலயத்தை அழிக்க விடாது தடுத்தது என அறிய முடிகின்றது.  இவ்வாறு  அற்புத வரலாற்றை கொண்ட இவ் ஆலயத்தில் இன்றும் அம்மனின் அருள் சக்தியை எடுத்துக்காட்டும் நிகழ்வுகள் நடந்தவண்ணமே உள்ளன.


சில நாட்களுக்கு முன்பு ஆலயத்தில் அம்மனுக்கு சொந்தமான மிகவும் பெறுமதி வாய்ந்த அம்மனுடைய வரலாற்றைக் கொண்ட இரண்டு புத்தகங்களை ஒரு திருடன் களவாடி தப்பிச் சென்றுள்ளான்.


பக்த அடியார்கள் திருடனை துரத்திச் சென்ற போதும் திருடனை பிடிக்க முடியவில்லை, திருடன் மறுநாள் காலையில் அந்தத் திருடன் முள்ளியவளை நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி அந்த காரினை இடைமறித்துள்ளார்.


திருடன் செய்வதறியாது தடுமாறி அதே இடத்தில் திருடனுடைய கார் விபத்துக்குள்ளாகியுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


கண்ணகி அம்மனை முழுமனதுடன் மனதுருகி வழிபட்டு வரும் பக்தர்களுக்கு அன்னை தன் அபய கரம் நீட்டி அருள் தருகின்றார்.
இவ் அதிசய நிகழ்வை கேள்வியுற்ற பக்தர்கள் அம்மனைக் காணவென ஆலயத்திற்கு வருகைத்தந்து கொண்டிருக்கின்றனர்.