You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கு கருவியாக விளங்கும் விபூதி

2018-08-15


சைவசமயிகளின் அடையாலச் சின்னமாகவும்  எமது வாழ்வு நிலையற்றது என்பதை உணர்த்துவதற்குமாகநாம் விபூதி  தரித்துக்  கொள்கின்றோம். 


இதற்கும் மேலாக முறையாகத் தயாரித்த விபூதி தரிப்பதனால்  எமது உடலின்  உள்வாங்கு  சக்தியை அதிகரிக்க  முடியும்  என்பது  அறிவியல்  உண்மை. 


விபூதி தரிப்பதால் கிரகிக்கும் திறன் அதிகரித்து, நம்மை சுற்றி இருக்கும்  தெய்வீக  சக்தியை உள்வாங்கிநாம்  மனம் உயர்ந்த  பரிமாணத்தை  நோக்கிச்  செல்ல  வழிசெய்கிறது. 
நம் உடலின் சக்திநிலையில் ஏழு சக்கரங்கள் அமைந்துள்ளன. இந்த சக்கரங்கள், நம் உடலின் சந்திப்புமையங்கள். இவை மிகவும் சூட்சுமமானவை. இவை கண்களுக்கு புலப்படாது. அனுபவப்பூர்வமாக இந்தச்சக்கரங்களை நாம் உணர முடிகின்றது. 


உங்கள் ஆன்ம சக்தி மேன்மேலும் அதிகரிக்கும் போது, இயற்கையாகவே உங்கள் சக்தி ஒருசக்கரத்திலிருந்து அடுத்த சக்கரத்திற்கு உயரும். இவ்வாறு உயரும் போது நமது நேர்மறை சக்தி அதிகரித்துநாம் வாழ்வில் உயர்நிலையை அடைய உதவுகின்றது. 


எமது முன்னோர்கள் ஒரு மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கு விபூதியை ஒரு கருவியாகப் பார்த்தார்கள். இந்த விஞ்ஞானத்தை மீண்டும் உயிர்பெறச் செய்து, நாம் பயன்பெறுவோமாக.