You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இந்திய சுதந்திர தினத்தன்று தாய் நாடு திரும்பிய புத்தர்.

2018-08-16


12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்படும் இந்திய நாட்டின் பீகார் மாநிலத்தின் நாளந்தாவிலுள்ள தொல்லியத் துறை அருங்காட்சியகத்திற்கு சொந்தமான வெண்கல புத்தர் சிலையொன்றினை லண்டன் பொலிஸார் இந்திய தூதரகத்திடம் நேற்றை தினம் ஒப்படைத்துள்ளனர். 


பீகார் மாநிலம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த 13 சிலைகள்  கடந்த 1961-ம் ஆண்டில் கொள்ளை போனது, அதில் வெண்கலத்தால்  ஆன இந்த புத்தர் சிலையும் ஒன்று.


இவ் புத்தர்  சிலையானது 57 வருடங்களுக்கு பின்பு லண்டனில் நடந்த  வர்த்தக கண்காட்சியொன்றில் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தபோது    இந்தியா பிரைட் புராஜெக்ட் என்னும் அமைப்பைச்  சேர்ந்த விஜய் குமார் என்பவராலும் இந்த சிலை நாளந்தாவில்  திருட்டு போன சிலை என உருதி செய்யப்பட்டதை தொடர்ந்து  இங்கிலாந்து கலைப்பொருட்கள்  குற்றப்பிரிவு பொலிஸாரினால்  சட்டபூர்வமாக மீட்கப்பட்டு இந்தியாவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.