You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




உலகின் பழமையான நீர் பாசன தொழில்நுட்பம், தமிழரின் அடையாளம் அறிவீர்களா?

2018-08-21


சோழ மன்னர்களில் மாவீரனாக போற்றப்படும் 2ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டை ஆட்சி  செய்த கரிகால சோழனால் கட்டப்பட்ட அணை தான் இந்தியாவில் உள்ள உலக பழமை வாய்ந்ததும் இன்று வரை உபயோகத்தில் உள்ளதுமான  கல்லணையாகும். இன்றும் சோழர்களின் கட்டிட புகழை பறைசாற்றி நிக்கின்றது இந்த கல்லணை
 திருச்சியில் அகண்ட காவேரி என கூறப்படும் முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி மற்றும் கொள்ளிடம்  இரண்டாக பிரியும் இடத்தில் இமைந்துள்ளது இந்த கல்லணை 


    


பழமையான நீர் பாசன தொழில்நுட்பம்
உலகின் மிகப்பழமையான இவ் கல்லணை  உலகின் மிகப்பழமையான  நீர்ப்பாசனத் திட்டத்தை கொடுள்ளது.
 மணலில் அமைக்கப்பட்ட அடித்தளம் கொண்ட  இந்த கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்து நெளிந்த வளைந்த அமைப்புடன் காணப்படும்  இந்த இணை 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவதே அதிசயமான உண்மையாகும்.
 


கல்லணை உருவான கதை 
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு  காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து விவசாயம் பாதிக்கப்படுவதையும், மக்கள் துயரப்பட்டதைக் கண்டு கவலை கொண்ட கரிகால சோழன் அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான் .
  ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியை மரித்து மேல் அணைக்கட்டுவது என்பது சாதாரன காரியமல்ல, ஆனால் கட்டடகலையின் உச்சத்தில் நின்ற சோழ மன்னன் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தன்.


நாம் கடல் தண்ணீரில் நிற்கும் போது, அலை நமது கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே மணல் அரிப்பு ஏற்பட்டு, நம் கால்கள் மண்ணுக்குள்ளே புதையும். இதைத் தான் சூத்திரமாக மாற்றினார்கள் பழந்தமிழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டு வந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதையும். அதன் மேல் மற்றொரு பாறையை வைப்பார்கள்.


நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள். இதனால், இரண்டு பாறைகளும் ஒட்டிக்கொள்ளும். இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, மிக வேகமாக செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.


இவ்வாறு உருவான கல்லணைதான் இன்றும் இநத்தியாவில் நிலைத்து நின்று பழந்தமிழரின் நீர்ப்பாசனத் தொழில்நுட்பத்தை  உலகம் வியக்கும் சாதனையாகப் புகழப்படுகிறது.