You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




வரலாற்றில் தமிழரின் பதிவு - தாஜ்மஹால் முன்பு கட்டப்பட்ட காதல் சின்னம்

2018-08-21


தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னர் ராணி உதையமதி தன் கணவர் பீம்தேவுக்காக கட்டிய கிணறு வடிவிலான பிரம்மாண்டமான ' ராணி கி வாவ்' அரண்மனை. இராணி உதயமதி நிறுவியதால் இக்கிணறு இராணியின் கிணறு என அழைக்கப்படுகின்றது.


 குஜராத்திலுள்ள சித்பூர் என்ற ஊருக்கு அருகிலுள்ள பதான் கிராமத்தில் உள்ளது இந்த கிணறு நூற்றுக்கணக்கான படிகளுடன் கூடிய இந்த அழகிய கிணற்றினுல்  9 கி்மீ.நீள சுரங்கப்பாதை உள்ளது தனிச் சிறப்பு. 


காலப் போக்கில் இந்த அழகிய கிணறு கற்களாலும் மணலாலும் மூடப்பட்டுவிட்டது. இதனால்  இந்தக் கிணற்றை பற்றித் தெரியாமல் இருந்தது . 1960 ஆம் ஆண்டு தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட  இக்கிணறு இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்களின் ஒன்றாக 22 ஜூன் 2014 அன்று யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டது.

இராணியின் கிணறு உருவான வரலாறு
1050-இல் சோலாங்கி குல அரசை நிறுவியவரும், மன்னன் மூலராஜனின் மகனுமான முதலாம் பீமதேவனின் (1022–1063) நினைவாக, அவரின் மனைவியும் பட்டத்து ராணியுமான உதயமதியும், மகன் முதலாம் கர்ணதேவனும் இணைந்து இக்கிணற்றை நிர்மாணித்தனர். இந்தக் கிணறு 64 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் 27 மீட்டர் ஆழமும் கொண்டது. இது ஏழு அடுக்குகளாகக் கட்டப்பட்டுள்ளது. கடைசிப் படிக்கட்டுக்குக் கீழே பல கி.மீ நீளமுள்ள சுரங்கப் பாதை சித்பூருக்குச் செல்கிறது. போர்க் காலங்களில் அரச குடும்பத்தினர் தப்பிச் செல்வதற்காக இச்சுரங்கப்பாதைக் கட்டப்பட்டிருக்கிறது. 1304இல் வாழ்ந்த சமண சமயத் துறவி மெருங்க சூரி என்பவர் எழுதிய பிரபந்த சிந்தாமணி என்ற நூலில் ராணி உதயமதி நிறுவிய இந்த படிக் கிணற்றைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறன.