You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கல்லையும் கவிமீட்ட செய்யும் தமிழரின் கட்டிடக்கலை அதிசயம் - இசைத் தூண்கள்

2018-08-26


இசைத் தூண் என்பது, இசை எழுப்பும் வகையில் பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்ட கற்றூணைக் குறிக்கும். பெரும்பாலும் கோயில் மண்டபங்களின் ஒரு பகுதியாக அமைக்கப்படும் இசைத்தூண்கள் தமிழகத்தின் பல கோயில்களில் காணப்படுகின்றன. இசைத்தூண்கள் பண்டைய தமிழரின் கட்டிடக்கலையின் ஒரு அம்சமாக விளங்குகின்றது.

 


இசை உருவாக்கக்கூடிய கருவிகள் பல உள்ளன ஆனால் கல்லினால் இசைக்க கூடிய அதிசயத்தை காட்டி நிற்கின்றன இந்த இசைத்தூண்கள். இவற்றை  ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டும் போது சப்தஸ்வரங்கலான " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அவை இசைக்கின்றன. சில பெரிய தூண்களை சுற்றி வடிவமைக்கப்பெற்றுள்ள சிறிய தூண்கள் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றன. இதில் பெரிய தூண்கள் கர்நாட சங்கீதமும், அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் "மிருதங்கம்,கடம்,சங்கை,வீணை,மணி " போன்ற இசைக்கருவிகளின், இசையையும் தருகின்றதன.  
இதற்றகாக ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருக்கின்றனர் இந்த கட்டிட கலைஞர்கள். இசை பயின்றவர்கள் இதனை மீட்டும்போது இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசையை இசைத் தூண் இசைகின்றனவாம்.மேலும் கல்லினால் வடிவமைக்கப்பட்ட போதும் இதை மீட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லையாம்.


பண்டைய தமிழிலே  "மிடறு" என குறிப்பிடப்படும் இசைத்தூண்கள் கோயில் விழாக்களின் போது இசைக்கலைஞ்சர்களால் இசைக்கப்பட்டுள்ளன. 

 


இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை, ஆனால் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை. 
ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான " அலைகற்றையை " உருவாக்குகின்றது . இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானிகள் இதில் ஒளிந்துள்ள "இயற்பியல்" அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிட்டனர். 


இதன் இயக்கம் பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போதும் ஆச்சரியத்தை மட்டுமே பதிலாய் தந்து தமிழரின் பெருமையை கூறி நிற்கின்றன இசைத் தூண்கள்.