You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பண்டைய தமிழரின் நன் நீரூற்று அறியும் தொழில் நுட்பம்

2018-08-29



இன்றைய காலத்தில் பல தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வெட்டப்படும் கிணறுகள் கூட வெயில்காலத்தில் வற்றி விடுகின்றன.  அல்லது தூய்மையான  நிரைபெற  முடியவில்லை ஆனால்  எத்தனை  யோபழமையான  கிணறுகள்  இன்றும் தூய்மையான  நீரை  வற்றாது எமக்குத் தருகின்றன. 


எந்த ஒரு தொழில்நுட்பமும் இல்லாத நிலையில் தூய்மையான மற்றும் வற்றாத நீரூற்றினை எவ்வாறுகண்டறிந்தனர் என்பது பற்றி அறிவீர்களா? 
அதற்காக அவர்கள் இயற்கையின் உதவியையே  நாடி உள்ளனர்  எவ்வாறு என்று  தெரிந்து  கொள்ளுங்கள். 

கிணறு வெட்ட நீர் உள்ள இடமாக தெரிவு செய்தல் பச்சை புற்கள்  வளர்ந்துள்ள  இடத்தில்  கிணறுவெட்டினால்  குறைந்த ஆழத்தில்  நீரூற்று  தோன்றும் 

நல்ல நீரூற்று என அறியும் தொழில் நுட்பம். 
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள்  இரவு தூவி  விடவேண்டும்.  அடுத்த நாள்  கவனித்தால்  எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்தஅடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம்  அந்த  இடத்தில்  கிணறு  வெட்டினால் தூய நீரூற்றுஇருக்கும். 

கோடைக்காலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் ? 
கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்தநிலத்தில் மேய விட்டு கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில்  படுத்து  அசை  போடுகின்றனவாம். 
அவை நான்கு , ஐந்து நாட்கள் தொடர்ந்துபடுக்கும்  இடத்தில் கிணறு வெட்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.