You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பத்திரு வடிவில் வந்த கதிர்காம கந்தன்

2018-09-04


நீர்கொழும்பு கதிரான பிரதேசத்தில் அமைந்துள்ளது கதிரானை தேவாலையம். சிங்கள மக்களின் வழிபாட்டு தளமாக விளங்கும் இவ் ஆலயம் கதிர்காம கந்தனுடக் தொடர்புடையது.


இவ்  தேவாலயத்தின் வருடாந்த வீதிவுலாஉற்சவம் கடந்த சனிக்கிழமை (01-09-2018) இடம் பெற்றுள்ளது. 


இவ் ஆலயம் கதிர்காம ஆலயத்தின் வழிபாட்டு முறைகளை ஒத்த வழிபாட்டை கொண்டுள்ளது. இதற்கு இவ் கிராம வாசிகள் மூலம் பழமையான கதை ஒன்றை அறியமுடிகின்றது.


இவ் பிரதேசத்தில் வாழ்ந்த பழங்குடி மக்கள் மிகப்பெரிய எருது ஒன்றினால் தாக்கப்பட்டனர். அந்த எருதிடமிருந்து தம்மை மீட்டு தரும்படி கதிர்காம கந்தனிடம் வேண்டியதாகவும். அதன் பின்பு கதிர்காமத்தில் இருந்து வந்த பத்திரு என்பவரால் அவ் எருது கொள்ளப்பட்டு இவ் கிராம மக்கள் காப்பற்ற பட்டதாகவும் கூறப்படுகின்றது. 


இவ் நிகழ்வின் பின் பத்திரு என்பவர் மறைந்துவிட்டதனால் கதிர்காம கந்தனே பத்திரு வடிவில் தமக்கு உதவியதாக எண்ணி கந்தனுக்கு நன்றி கூறும் வகையில் இவ் ஆலயம் அமைக்கப்பட்டு வருடாந்தம் விழா நடத்தப்படுவதாகவும்  அங்கு வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்.


ஆலய விழாவின் போது அலங்கரிக்கப்பட்ட ரதம் மாட்டு வண்டியில் பூட்டப்பட்டு வீதி உலா வரும் நிகழ்வு இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.