You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




முன்று நாள் சிவப்பு நிறமாகும் நீரூற்று பீடம் கொண்ட அம்பிகையின் ஆலயம்

2018-09-06


இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் நீலாச்சல் மலைச் சாரலில்  அமைந்துள்ளது 'காமாக்யா' சக்தி பீடங்கள் இங்கு அமைந்துள்ள சக்தி பீடங்கள் அனைத்திற்கும் முதன்மையானது யோனி பீடமே என்று புராணங்கள் கூறுகின்றதது.


மூலவர் : காமாக்யா
தீர்த்தம் : பிரம்மபுத்திரா 
பீடம் : காம கிரி  


அம்பிகைக்கு இத்தலத்தில் திருவுருவம் கிடையாது மாறாக  இருண்ட கருவறையில் யோனி வடிவ கற்பீடத்தில் உக்ர தேவதையாக அன்னை கோயில் கொண்டருள்கிறாள்.  ஹிந்துக்கள் மட்டுமே இந்த காமாக்யா கோயிலில் நுழைவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். 
இங்கு தானாக மேலெழும்பும் நீரூற்று ஒன்று உள்ளது . பக்தர்களுக்கு அந்தப் புனித நீரே தீர்த்தமாக வழங்கப்படுகிறது. 


ஆலய புராணம் 
தட்சன் செய்த யாகத்தில் சிவபெருமானை அழைக்காத காரணத்தினால் அம்பிகை கோபம் அடைந்து அந்த யாககுண்டத்திலேயே விழுந்து விடுகிறார். அப்படி விழுந்த அம்பிகையின் உடலை தனது தலையில் சுமந்தபடி  சர்வேஸ்வரன் சித்தம் கலங்கி உலகை சுற்றி வருகிறார். ஸ்ரீ அம்பிகையின் உடலை ஸ்ரீ ஈஸ்வரரிடம் இருந்து தனியாக பிரிக்கும் வரை ஸ்ரீ சிவபெருமானின்" சித்தம் தெளிவடையாது என்று எண்ணிய ஸ்ரீ மஹாவிஷ்ணு  உலக நன்மை கருதி தனது சக்ராயுதத்தை ஏவி ஸ்ரீ அம்பிகையின் உடலை துண்டு துண்டாக வெட்டி எரிகிறது.
அப்படி வெட்டப்பட்ட ஸ்ரீ அம்பிகையின் திரு உடல் பாரத தேசத்தில் 108 இடங்களில் விழுகிறது, அதில் வயிறு முதல் தொடை வரையான பகுதி விழுந்த இடம்தான் ஸ்ரீ "காமாக்னி" கோவிலாகும்.


அம்புபச்சி மேளா விழா
இவ் ஆலயத்தில் கொண்டாடப்படும் அம்புபச்சி மேளா எனும் திருவிழா மிக சிறப்பு வாய்ந்தது இது போன்ற விழா உலகில் வேரு எந்த ஆலயத்திலும் கொண்டாடப்படுவதில்லை. காமாக்யா தேவியின் வருடாந்திர மாதவிலக்கு நாளில் இந்த திருவிழா கொண்டாடப்படுவதாக ஐதீகமாக சொல்லப்படுகிறது. விழாவின் முதல் மூன்று நாட்கள் ஜகன் மாதாவான அன்னைக்கு வருடாந்தர விலக்கு தினங்களாக கருதப்படுகிறது. அந்நாட்களில் திருக்கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
அந்த ன்று நாட்கள் சமயம் நீர் ரத்த சிகப்பாக மாறி விடும் மேலும் அந்த 3 நாட்கள் கோவில் திறக்க மாட்டார்கள். 


மேலும் அந்த 3 நாட்கள் அசாம் மாநிலத்தில் பாயும் பிரம்மபுத்ரா நதி தண்ணீர் சிகப்பாக மாறும் அதிசயமும்நடக்கும் 
நான்காம்  நாள் ஆலயம் திறக்கப்பட்டு அம்பிகையை நன்னீரால் அபிஷேகம் புரிந்து ஆராதித்து மகிழ்வர். நாடெங்கிலுமிருந்து பல லட்சம் பக்தர்கள் விழாவையும் அம்பிகையையும் தரிசிக்கக் கூடுவர். இத்தலத்தில் புரியப் படும் ஜபம், தவம், யோகம், இவை விரைவில் சித்தி பெறுகின்றன. பரம ரகசியமான இத்தலத்தில் பிரார்த்தனைகள் விரைவில் பலனளிக்கும்.


 நாடெங்கிலும் இருந்து தந்திரிக் யோகிகள் இந்த திருவிழாவின் போது அதிகம் விஜயம் செய்கின்றனர். துர்க்கா பூஜா மற்றும் மானஷா பூஜா ஆகிய திருவிழாக்களும் இந்த கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. 


தலச் சிறப்பு  : பாண்டவர்கள் இத்தல தேவியைப் போற்றித் துதித்து வழிபட்டுள்ளனர் என்று மகாபாரதம் உத்யோக பர்வம், துரோண பர்வம் குறிக்கிறது. மேலும் காளிகா புராணம், காமக்யா தந்திரம், யோகினி தந்திரம், திரிபுரா ரகசியம் ஆகிய அரிய நூல்களும் யோனி பீடத்தின் சிறப்பினைப் பேசுகின்றன.