You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பாண்டவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய மகாபாரத போரின் பதிமூன்றாம் நாள். காரணம் அறிவீர்கலா?

2018-09-09


தர்மத்தை நிலை நாட்டவென மகாபாரதத்தில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் இடையே நடந்த  மகாபாரத போர் உலகில் பெரும் அளவு அழிவை ஏற்படுத்திய போர் அகும். இந்த போரில் பாண்டவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய நாள் போரின் பதிமூன்றாம் நாளாகும். அதற்கு காரணம் அன்று துரோணாச்சாரியார் அமைத்த சக்கர வியூகம்.


பதினெட்டு நாட்கள் நடந்த இந்த போரில் ஒவ்வொரு நாளும் இரண்டு படைகளும் ஒவ்வொரு வியூகத்தை அமைத்தனர். வியூகத்தில் கூர்ம வியூகம், திரிசூல வியூகம், கிரௌஞ்ச வியூகம் என பல வியூகங்கள் இருக்கிறது. இதில் மிகவும் கடினமான வியூகம் சக்கர வியூகம்தான். சக்கர வியூகத்தை உடைக்கத் தெரிந்தவர்கள் பூமியில் மிக சிலரே பீஷ்மர், துரோணாச்சாரியார், பரசுராமர், அர்ஜுனன், கர்ணன், துருபதன். போர்த்திறமை மட்டுமின்றி கணிதமும், அறிவியலும் இருக்கிறவரே இந்த சக்கர வியூகத்தை உடைத்து வெற்றி கொள்ள முடியும்.


சக்கர வியூகத்தின் பின் இருக்கும் அறிவியலை பற்றி இங்கு பார்க்கலாம்.


சக்கர வியூகம்
பெயருக்கேற்றாற்போல் சக்கர வடிவத்தில் இருக்கும் வியூகத்தில் ஏழு அடுக்குகள் இருக்கும், ஒவ்வொரு அடுக்கிலும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும். வியூகத்தின் மையத்தில்தான் படைத்தலைவர் இருப்பார். ஒருவேளை வியூகத்திற்குள் நுழைந்து விட்டால் வீரர்களை கொல்ல கொல்ல அந்த இடத்திற்கு மற்றொரு வீரர் வந்து சுழன்றுகொண்டிருப்பர். இதனால் உள்ளே நுழைபவர் எந்த அடுக்கில் இருக்கிறோம் என்று குழம்பி உளவியல்ரீதியாக பாதிக்கப்படுவர். ம்,மேலும் சக்கரவியூகத்தை முறியடிக்கும் கணக்கு தெரிந்தால் மட்டுமே அதை விட்டு வெளியே வர முடியும். அது தெரியாததால்தான் அபிமன்யு சக்கர வியூகத்தில் சிக்கி உயிரிழந்தான். சக்கர வியூகத்திற்கு பத்ம வியூகம் என்ற பெயரும் உள்ளது.

 

சக்கர வியூகத்தின் இரகசியம்
சக்கர வியூகத்தில் மிகப்பெரிய கணிதம் ஒன்று ஒளிந்துள்ளது, அதனை அறிந்தால்தான் அதனை முறியடிக்க முடியும். அதனை அர்ஜுனன் துருபதனுடன் நடந்த போரில் சிறப்பாய் செய்திருப்பார். அதவாது சக்கர வியூகத்தில் மொத்தம் ஏழு அடுக்குகள் இருக்கும். எனவே அதனை உடைக்கும் போது 1/7 என்ற அளவீட்டில் கணக்கிட வேண்டும். இந்த கணக்கின் படி 1/7 = 0.142857142857142857 என்று அளவிடும்போது 142857 என்ற எண் திரும்ப திரும்ப வரும். இதுதான் தந்திரம்.  ஒவ்வொரு சக்கரமும் உடையும்போது அந்த இடத்திற்கு வேறு வீரர்கள் வந்துவிடுவதால் இந்த சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும்.


ஒவ்வொரு அடுக்கையும் கடக்கும் போது ஒரு எண்ணை அதிகரிக்க வேண்டும், இறுதியாக கடைசி சக்கரத்தில் நுழையும் போது ஏழு மடங்கு ஆற்றலுடன் போர் புரிய வேண்டும், அப்பொழுதான் சக்கர வியூகத்தை உடைக்க இயலும்.
இந்த 0.142857-ஐ 7 உடன் பெருக்கும்போது தான் இந்த எண் சூழல் உடையும். 
0.142857142857142857*2 = 0.2857142285714285714, 
0.142857142857142857*3 = 0.42857142857144285714 
இப்படிய நீண்டு கொண்டே இருக்கும், இந்த எண்ணை 7-ஆல் பெருக்கும்போது மட்டும்தான் இந்த சூழல் எண் மாறும். 
0.142857142857142857*7 = 0.99999999999999 
இப்படித்தான் சக்கர வியூகத்தை உடைக்க முடியும். இதனை அறிந்துதான் போரில் துருபதனை ஆன்மீகமும், அறிவியலும்  நிரம்பிய அர்ஜுனன்  கௌரவர்களை வீழ்த்தியிருப்பார்.