You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சிவனடிபாதமலையின் அடிவாரத்தில் சிவலிங்க பிரதிஸ்டை

2018-09-09


அன்மை காலமாக சர்சசைகளுக்கு உள்ளாகி உள்ள சிவனடிபாதமலையின் இறையியலை காக்கும் பொருட்டு உலக சைவத் திருச்சபையின் ஏற்பாட்டில் சிவனடிபாதமலை அடிவாரத்தில் காணப்படும்  ஈஸ்வரன் ஆலயத்தில் சிவலிங்க பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.


இந்த தெய்வீக நிகழ்வு ஆலய தர்மகர்த்தா சிவஸ்ரீ சி.சிவசங்கர குருக்கள் தலைமையில் இன்று காலை சிவலிங்க பிரதிஸ்டையும் குடமுழுக்கும் நடைபெற்றது.


இந்த தெய்வீக நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் உலக சைவத் திருச்சபையின் இலங்கைக்கான தலைவரமான வே.இராதாகிருஸ்ணன், உலக சைவத் திருச்சபையின் தலைவரும் கனடா பெரிய சிவன் ஆலயத்தின் தர்மகர்தாவாகிய விபுலாநந்தா அடிகளார்¸ மத்திய மாகான சபை உறுப்பினர் ஆர். ராஜாராம், மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவி ஜீ.செண்பகவள்ளி உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும்; பெரும் திறலான பக்தர்களும் கலந்துக் கொண்டார்கள்.