You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சங்ககாலத்தின் கதைகள் கூறும் கீழடி அகழ்வாராய்ச்சியின் நான்காம் கட்டம்

2018-10-11


சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை  நாகரிகத்தின் சான்றுகளை கொண்ட கீழடி அகழாய்வில் நான் காம் கட்டபணிநடைபெற்றுள்ளது. இவ் அகல்வின்போது தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட சுமார் 7000 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தொல்லியல் துறை அறிக்கை தெரிவிக்கின்றது.


தமிழகத்தின் மிகப்பெரிய அகழாய்வாக கருதப்படும் வரலாற்ற சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில்  வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள அமைந்துள்ளது.


இவ் அகழ்வாராச்சியின் சான்றுகள் சிந்து, கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின், இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,  தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாற்று கருத்தை முன்வைத்துள்ளன. இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும்,சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனா்.


நான்காம் கட்டம் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள்


4-ம் கட்ட அகழாய்வு பணியில் 6 தங்க ஆபரணங்கள் உட்பட 7 ஆயிரம் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆபரணங்களின் மதிப்பு மற்றும் வயது குறித்து ஆய்வு செய்ய பீட்டா ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாம்.

 

உண்மைகளை உலகறியச் செய்ய கோரிக்கை


கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்பாக வழக்கறிஞர் கனிமொழி மதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும், தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அவர்  தனது மனுவில் கூறியியுள்ளாராம்.