You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பஞ்சஈசுவரங்களில் இதுவரை மீட்கப்படாத தொண்டீசுவரம் தேவிநுவர விஷ்ணு ஆலயமாக

2018-12-05


கொள்ளப்படுபவை வடக்கே மன்னார் மாதோட்டையில் விளங்கும் திருக்கேதீஸ்வரம், கிழக்கே திருகோணமலையில் அமைந்திருக்கும் திருக்கோணேஸ்வரர்  ஆலயம், வடக்கே கீரிமலையில் உறைந்திருக்கும் நகுலேஸ்வரர் ஆலயம், தெற்கே விளங்கிய தொண்டீஸ்வரம் சிலாபத்திலே முன்னேஸ்வரம், ஆகியவை ஆகும்.
இவற்றில் வரலாறு திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம், நகுலேஸ்வரம், முன்னேஸ்வரம், ஆகியவை பல முறை அழிவுக்கு உட்பட் போதும் இன்றும் சிவ ஆலயங்களாக தமது தனித்துவத்துடன் விளங்குகின்றன. 


ஆனால் தொண்டீசுவரம் எனப்படும் சிவன் ஆலயம் வரலாற்று நூல்களில் மட்டுமே உள்ளது. இவ் ஆலயத்தை தேடிச்செல்பவருக்கு  ஏமாற்றமே மிஞ்சும்.


தொண்டீசுவரம் கோயில் இருந்த இடத்தில் இன்று விஷ்ணு கோயில் ஒன்று அமைந்திருக்கிறது. பௌத்தர்களால் இந்தக் கோயில் தெவிநுவர கோயில் என்று அழைக்கப்படுகிறது. பஞ்சஈசுவரங்களில் இதுவரை அழிக்கப்பட்ட நிலையல் உள்ள சிவாலயம் இதுவாகத்தான் இருக்கின்றது. இவ் ஆலயத்தில் விஷ்ணு மூலஸ்தான மூர்த்தியாக உள்ளார்.   


ஆலயத்தின் தொன்மை
இலங்கையின் தெற்கில் மாத்தறை மாவட்டத்தில் தெவிநுவர (தேவந்திரமுனை) எனும் பகுதியில் அமைந்திருந்த வரலாற்று சிறப்பு மிக்க சிவன் கோயில் தொண்டீசுவரம். இதிகாசங்களின்படி, இவ் தேவந்திரமுனை சிவ பக்தனான இராவண மன்னனின் காலத்தில், ஒரு வளர்ந்து வரும் நகரமாக இருந்துள்ளது. 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "பராவி சந்தேசிய", எனப்படும் கவிதை தொகுப்பில் அசுரரை அழிக்கும் வீரனாக தொண்டீசுவரம் இறைவனை  விவரித்துள்ளது.  இதன் படி இவ் ஆலயம் இராமாயண காலத்துடன் தொடர்புடையதாக அறிய முடிகின்றது.


7 ஆம் நூற்றாண்டில் மன்னர் தப்புல என்பவரால் மாணியம் வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்ட இவ் ஆலயம், சோன்சா தலைமையிலான போத்துக்கீச இராணுவத்தின் படையெடுப்பினால் அழிக்கப்பட்டது. அதன் பின்பு கண்டி இராச்சியத்தின் மன்னன் இரண்டாம் ராஜசிங்கன்  (1635 - 1687) மாத்தறையை கைபற்றியதன் பின்  இவ் ஆலயத்தை தெவிநுவர விஸ்ணு ஆலயமாக கட்டியெழுப்பினான் என அறிய முடிகின்றது.


மறைக்கப்பட்ட உண்மைகள்
தெற்கிலிருந்த தொண்டீஸ்வரம் இலங்கையை ஆக்கிரமித்த போத்துக்கீசியரால் சிதைவடைக்கப்பட்டது. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது ஒரு பெரிய சிவலிங்கம் ஒன்று ஆய்வாளர்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த தகவல் வெளியில் வெளிவராமல் தடுக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளரான முருகர் குணசிங்கம் அவர்கள் கூறுகின்றார்.


ஆலயத்தின் தற்போதைய நிலை
இன்று விஷ்ணுஆலயமாக விளங்கும்  தொண்டீசுவரம் ஆலயத்தில் ஆண்டு முழுவதும் நாடு எங்கும் உள்ள பக்தர்களினால் வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. இன மத பேதமின்றி பக்தர்களை ஒன்று சேரும் ஜூலை மாதத்தில் கொண்டாடப்படும்  எசலா போயா உற்சவம் மிகவும் சிறப்பு மிக்கது.


13 ஆம் நூற்றாண்டு முதல் கொண்டாடப்படும் தேவிநுவரவில் எசலா திருவிழா  இரண்டாம் பராக்கிரமபாகு மன்னனால் பழமையான ஆலயத்தை மீட்டுதந்தமைக்காக உபுல்வனுக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டதாக அறியப்படகின்றது.
ஆகவிதிகளில் அமையாத ஆலயம், ஆகம விதிகளில் பூஜைகளும் இல்லை. மந்திரங்களும் இங்கு ஈசனுக்கு இல்லை, ஈசன் விஷ்ணுவாக  வடிவம் தாங்கி பக்தர்களின் அன்பில் ஆனந்த கூத்தாடும் ஆலயம் இது. பார்பவர் கண்களுக்கு பார்க்கும் வடிவில் தென்படும் இறைவன் எந்த பாகுபாடும் இன்றி எல்லோறையும் அரவனைக்கும் சிறப்பை இங்குதான் பார்க்கலாம்.