You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




வழிப்பறி செய்து இறை பணி செய்த திருமங்கை மன்னனின் ஸ்ரீ ரெங்கநாதர் வேடுபறி நிகழ்ச்சி!

2018-12-27


பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பு வாய்ந்தது. இவ் உற்சவம்  பகல்பத்து. ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் கொண்ட விழாவாக நடைபெறுகின்றது. 


ஏகாதசி  உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாள் திருக்கைத்தல சேவை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து  ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாள் திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ் நிகழ்வு பற்றிய சுவாரஸ்யமான கதை உள்ளது. 


சோழப் பேரரசில் தளபதியாக இருந்து பின்பு பேரரசராக உருவான திருமங்கை மன்னன் பெருமாளிடம் கொண்ட அளவற்ற பக்தியால் ஸ்ரீரங்கம் கோயிலில் மதில் சுவர், கோபுரம் உள்ளிட்ட திருப்பணிகளை செய்துள்ளார். அவர் கோயிலில் கோவிலில் திருப்பணிகளை மேற்கோண்டு இருந்த போது போதுமான நிதி இல்லாமல் திருமங்கை மன்னன் கவலை அடைந்தார். இதற்காக அவர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு அதனால் வரும் பொருளை கொண்டு திருப்பணிகளை செய்து வந்துள்ளார். தன்னுடைய பக்தானாக இருந்தாலும் தவறான வழியில் வரும் பணத்தை கொண்டு திருப்பணிகளை செய்வதை தடுக்க பெருமாள் மாறுவேடத்தில் வருகிறார். இதைபோல் அறியாமல் திருமங்கை மன்னன் வழக்கம் போல் வழிப்பறியில் ஈடுபடுவது போல பெருமாளையும் வழிமறித்தார். அப்போது பெருமாள் மன்னனின் செயல்களை தடுப்பதற்காகவும், திருத்துவதற்காகவும் திருமங்கை மன்னன் காதில் "ஓம் நமோ நாராயண" என்ற அஷ்டாஷர மந்திரத்தை ஓதினார். இந்த மந்திரத்தின் மகிமையால் திருமங்கை மன்னன் திருந்தி பெருமாள் ஆசியுடன் திருமங்கையாழ்வாராக மாறினார். ஆழ்வாராக மாறியதும் வாடினேன் வாடி என்ற பாடலை பாடினார் இதனை கேட்ட பெருமாள் மகிழ்ச்சியடைந்தார்.

திருமங்கை மன்னன் மரபில் வந்த, திருச்சி,தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, திருவாரூர், வேலூர் மாவட்டங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் பூர்வ குடிகளானா காவல்காரர் என்ற "முத்தரையர்" இனத்தை சேர்ந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி இன்றும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகின்றது.