You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




3000 ஆண்டுகள் பழமையான இந்து ஆலயம் சவூதியில்? உண்மை இது தான்

2019-01-06


சவூதி அரேபியாவில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன், விநாயகர் கோவில் பற்றிய தகவல்கள் பல சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. ஆனால் தற்போது இவை இந்தோனேசியாவில் அந்நாட்டின் இஸ்லாமிக் பல்கலைக்கழகத்தின் பகுதியில் அகழ்வாராய்ச்சி குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான ஹிந்து கோவிலின் பகுதிகள் மற்றும் சிலைகளே என உறுதிச்செய்யப்படடுள்ளது.


இந்தியாவை ஆட்சி செய்த பேரரசர்கள் கடல் கடந்து தங்கள் ஆட்சியை விரிவுப்படுத்திய போது அவர்கள்  பல நாடுகளை தமது ஆளுகைக்கு கீழே கொண்டு வந்தனர். அவ்வாறான நாடுகளில் இந்தோனேசியா நாடும் ஒன்று. 


“2009-ம் ஆண்டில் டிசம்பர் 11-ம் தேதி இந்தோனேசியாவின் யோக்யகர்டா பிராந்தியத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் பல்கலைக்கழகத்தின் நூலகப் பகுதியில் பழமையான ஹிந்து ஆலயம் இந்தோனேசியாவின் Archaeological heritage preservation hall Yogyakarta-வின் அகழ்வாராய்ச்சி குழுவால் தோண்டி எடுக்கப்பட்டது ”

1000 ஆண்டுகள் பழமையானவை என அறியப்படும் கிம்புலன் கோவில் என அழைக்கப்படும் இக்கோவிலில் 9 அல்லது 10 நூற்றாண்டை சேர்ந்த நந்தி மற்றும் விநாயகர் சிலைகள் காணப்பட்டன. இவ் விநாயகர் சிலைகள் ஏனையவை போன்று இல்லாமல் வடிவமைப்பில் வித்தியாசங்களுடன் காணப்படுகின்றன.  இஸ்லாமிக் பல்கலைக்கழகத்தின் பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட இரு கோவில்களிலும் மேற்கூரைகள் இல்லை. அவற்றில் ஒன்று முக்கிய கோவில், மற்றொன்று perwara கோவில் ஆகும். முக்கியக் கோவிலில் சிவபெருமானின் லிங்க உருவம் கிடைத்துள்ளது.

 


அகழ்வாராய்ச்சி குழுவால் கண்டெடுக்கப்பட்ட கோவில், விநாயகர் சிலை, தோண்டி எடுக்கப்பட்ட பகுதி ஆகியவற்றை இணைத்த புகைப்படங்களே சவூதி அரேபியாவில் கண்டெடுக்கப்பட்ட 3000 ஆண்டுகள் பழமையானக் கோவில் என வதந்தியை பரப்பி உள்ளனர்.

இதேபோன்று இந்தோனேசியாவின் பண்டுல் பகுதியின் படுரேட்னோ கிராமத்தில் விநாயகர் சிலை, சிவன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இச்சிலை 1,000 அல்லது 1,100 ஆண்டுகள் பழமையானவை யோக்யகர்டா அகழ்வாராய்ச்சி குழு கணித்துள்ளனர்.