You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கோபிஸ்வரர் - சிவசிவ என கூறிட அசையும் சூலாயுதம் அமைந்த ஆலயம்

2019-01-07


தம்மை வழிபடும் வடிவினராக காட்சிதருபவர் கடவுள் எனவே தான் அவர் அனைத்தையும் கடந்தவராக உள்ளார். பல மொழிகளில் பல பெயர்களில் பல வடிவங்களில் நாம் இறைவனை வழிபட்டாலும் அவர் அனைத்து உயர்களையும் தமது ஒரோ பார்வையில்தான் பார்க்கின்றார். அன்பினால் செய்யும் அராதனையையே ஏற்கின்றார். 


அப்படியான இறைவன் இந்தியாவின் உத்திரகாண்ட் மாவட்டத்தில் கோபிஸ்வரராக எழுந்தருளி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு நலமும், வளமும் வழங்கி அருள் புரிகின்றார். 


இந்தியாவின் ரிஷிகேஷில் இருந்து 212 கிலோமீட்டர் தொலைவில் பத்ரிநாத், கேதார்நாத் செல்லும் வழியில் அமைந்துள்ளது கோபிஸ்வரர் கோவில். உத்தரபிரதேசத்தில் உள்ள மிக உயரமான இரண்டவது ஆலயம் இதுவாகும். புதுமையயை ஏற்படுத்தம் கலைப்படைப்புகளுடன் எழுந்து நிற்கும் இவ்  ஆலயம் கி.பி. 12 மற்றும் 13-ம் நூற்றாண்டு கோவிலை கத்திரிய அரசர்கள் கட்டியதாக இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகின்றது.


புராண கதைகளில் சிவபெருமான், கோபிய பெண்ணின் உருவத்தில் கிருஷ்ணருடன் நடனமாடினார் என்று சொல்லப்படுகிறது. இவ் நிகழ்வுடன் தொடர்பு படுத்தி  இத்தல இறைவனின் பெயர் கோபிநாத் என்று பெயரிடப்பட்டது என அறியமுடிகின்றது. 


கோபிஸ்வரர் ஆலயத்தின் பிரகாரத்தில் 5 அடி உயரத்திற்கும், 20 சென்டி மீட்டர் அகலத்திற்கும் அமையப்பெற்ற சூலாயுதம் ஒன்று உள்ளது. இவ் சூலாயுதம் பற்றி  ஒரு கதை சொல்லப்படுகிறது.


 ஒருமுறை சிவபெருமான் தியானத்தில் இருந்தார். மன்மதன் அங்கு சென்று சிவபெருமானின் தியானத்தை கலைக்க முயன்றான். இதை உணர்ந்த சிவபெருமான் சூலாயுதத்தை எடுத்து வீசினார். அது இந்த இடத்தில் ஆழமாக பதிந்து விட்டதாக நம்பப்படுகிறது. காலத்தால் அழியாத இந்த திரிசூலம் இன்றும் பக்தர்களின் தீவினைகளையும், துன்பத்தையும் போக்கியப்படி காட்சி தருகின்றது.  


இவ் ஆலயத்தில் இன்னும் ஒரு அதிசயம் உள்ளது. கைகளால் பிடித்து ஆட்டும் போது ஆடாத திரிசூலம், சிவனை நினைத்து சிவ நாமத்தை சொல்லி ஒரு சுண்டு விரல் கொண்டு தட்டினாலே அது லேசாக அசைவதை உணர முடியும். 


இந்த ஆலயம் உருவானதற்கு மற்றுமொரு கதையும் சொல்லப்படுகிறது. இப்பகுதியை ஆண்ட ராஜசேகர் என்ற மன்னன், ஒரு பசு இந்த இடத்திற்கு தினமும் வந்து தானாகவே பாலை சுரப்பதை அறிந்தான். இதையடுத்து மன்னன் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பார்த்தபோது, அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதை அறிந்து வியப்படைந்தான். பின்னர் அங்கு கோவிலை அமைத்தான். என கூறப்படுகின்றது.


24 கதவுகள் உடையதாக அமைக்கப்பட்டிருக்கம் இந்த ஆலயத்தின் அழகிய கோபுரம் காண்பவரை ஆன்மீகத்தின் சிகரம் எட்டச்செய்கின்றது. கருவறையில் வீற்றிருக்கும் சிவபெருமான் முன்பாக சிறிய நந்தி ஒன்று காண்போரை பரவசம் அடையச் செய்கிறது. பிரகாரத்தில் கணேசர் சன்னிதி, பார்வதி, பைரவர், அனுசியா, நவதுர்க்கா, அனுமன், பரசுராமன் சன்னிதிகள் உள்ளன. குளிர்காலத்தில் பனி உறைந்தும் நிலையில் குளிர் நிலவுவதால் இக்கோவிலுக்கு வெயில் காலத்திலும், வசந்த காலத்திலும் செல்வது சிறந்த அனுபவத்தை தரும்.