You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




அழிவின் விளிம்பில் பாடல்பெற்ற திருத்தளமான குறுக்கை வீரட்டானம்!

2019-01-22



திருநாவுக்கரசர் சுவாமிகள் திருஞானசம்பந்தர், திருமூலர், நக்கீரர், பரணர் ஆகியோரால் தேவாரதிருமுறைகள் பாடல் பெற்ற சிவாலயம் திருக்குறுக்கை வீரட்டானேஸ்வரர் ஆலயம். 


சிவபெருமான் மன்மதனை தன்னுடைய நெற்றிக்கண்ணில் எரித்து  அற்புதம் நிகழ்த்திய பெருமையை கொண்ட தலம் காமதகன சிவாலயம் குறுக்கை வீரட்டானம் இப்போது எங்கே பார்த்தாலும் காடுமயமாக காட்சி தருகின்றது. 


இந்தியாவின் நாகை பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து வில்லியனூர் செல்லும் வழியில் 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது 2000 ஆண்டுகள் பழமையான   இவ் ஆலயம்.
பழமையும்  பெருமையும் மிக்க இவ் சிவதளம் இன்று பராமரிப்பார் அற்று அழிவின் விளிம்பில் உள்ளது.கும்பாபிஷேகம் நடைபெற்று 58 ஆண்டுகள் ஆகிய  நிலையில் முறையான அபிஷேகம் சிவபூஜை எதுவும் நடைபெறுவதில்லை.


இரண்டு வருடங்களுக்கு முன்பு  பழமையான சம்பு விநோத சபை நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர் திருமேனிகள் திருட்டு போய் உள்ளன. அத்துடன் திருக்குறுக்கை தலவிருட்சமான  ஆயிரம் ஆண்டுகள் பழமையான கடுக்காய் மரம் முழுவதும் பூச்சி அரித்து அழிந்து கொண்டு வருகிறது .


ஆலயத்தின்  பிரமாண்டமாக மடப்பள்ளி லட்சக்கணக்கான மதிப்புள்ள சுவாமி வாகனங்கள் என்பன முறையான பராமரிப்பு இன்றி அழிவடைந்துள்ளது.


தொன்மையின் சின்னமாக உள்ள இவ் ஆலயம் பாரமரிக்கப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்துவினதும் வேண்டுகோள் ஆகும்.