You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பழமையான இந்து ஆலயங்கள் புனித ஸ்தலங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை : அமைச்சர் மனோகனேசன் உறுதி மொழி

2019-01-23


எமது இலங்கை திருநாட்டில் பழமையும் பெருமையும் வாய்ந்த இந்து ஆலயங்கள் சில வற்றை புனித ஸ்தலங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாக இந்து விவகார அமைச்சர் மனோகனேசன் தெரிவித்துள்ளார்.


இன்றைய (23-01-2019) தினம் திருகேதிஸ்வரத்தில்  இடம் பெற்ற ஒன்று கூடலில் கலந்த கொண்ட உறையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  


இந்து விவகார அமைச்சராக பதவி பிரமாணம் செய்ததை தொடர்ந்து  அமைச்சர் மனோகனேசன் இலங்கையில் உள்ள பாடல் பெற்ற அனைத்து ஆலயங்கலுக்கும் சென்று அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடி வரும் நிலையில்  இன்று காலை மன்னார் திருகேதிஸ்வர ஆலயத்திற்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.


இதன்போது   இந்து ஆலயங்கள் சில வற்றை புனித ஸ்தலங்களாக மாற்றுவதற்கு அமைச்சரவை பத்திரம் ஒன்றை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் திருக்கேதிஸ்வர பகுதிக்கு சொந்தமான  இன்னும் வழங்க்கப்படாத காணிகள் அனைத்தையும் மக்களின் பாவனைக்கும் ஆலய பாவனைக்கும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிதார் .


அத்துடன் குறித்த அமைச்சரவை பத்திரத்தினை சமர்பிக்கும் போது அனைவரும் அனைத்து பாரளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் மக்கள் பிரதி நிதிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோல் விடுத்துள்ளார்.
குறித்த நிகழ்வில் தேசிய அரச கரும மொழி அமைச்சின் மேலதிக செயலாளர் திரு.ரவீந்திரன் அவர்களும் இந்து விவகார அமைச்சின் பனிப்பாளர் உமா மகேஸ்வரன் அவர்களும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் திரு.பாஸ்கர் அவர்களும் வடமாகண இனைப்பாளர் மற்றும் மாவட்ட இணைப்பாளர் பாஸ்கர் மற்றும் தீபன் மரிய சீலன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.