You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சங்க காலத்தில் தைபொங்கள் விடுமுறை 28 நாட்களாம் : வாழ்வியலுடன் இணைந்த தமிழரின் பண்டிகை

2019-01-24


தமிழரின் பண்டிகைள் அனைத்தும் காலமாற்றத்தடன் பல மாறுதல்களுடன்   கொண்டாடப்படுகின்றது.  இவ் பண்டிகைகளை பண்டைய தமிழர்கள் கொண்டாடியமுறையை  ஆராயும்  போது அவர்கள் வாழ்கையுடன் கலாசாரத்தை இணைத்து  பார்த்துள்ள விதம் பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றது. 


தை பொங்கல்  பண்டிகையும் இவ்வாரே கொண்டாடப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தமிழ்  நாட்டில் மட்டுமே போகிப்பண்டிகை, பொங்கல் பண்டிகை, மாட்டுப்பொங்கல் பண்டிகை,  காணும் பொங்கல் பண்டிகை என தைப்பொங்கல் பண்டிகை நான்கு  தினங்கள்  கொண்டாடப்படுகின்றது. ஏயைவர்கள் பொங்கல் தினத்தை மட்டுமே பண்டிகையாக கொண்டாடுகின்றனர். 

இந்திர விழா
தை பொங்கலை சங்க காலத்தமிழர்கள்  28 நாட்கள் கொண்டாடியதாக   சங்க இலக்கியங்கள் மூலம் அறிய முடிகின்றது. அதாவது தை மாதம் முழுவதும் பண்டிகையாக கொண்டாடப்பட்டுள்ளது. ஆடிப்பட்டம் தேடி விதை என்று தமிழகத்தில் பழமொழி ஒன்றுண்டு.  விவசாயமே முதன்மைத் தொழிலாக கொண்ட பண்டைய தமிழர்கள் ஆடியில் பயிரிட்டு அதிலிருந்து சரியாக ஆறுமாதம் கழித்து,  தை மாதத்தில் அருவடை செய்து விளைந்த அரிசியை பொங்கலிட்டு மகிழ்கின்றனர்.
ஆறுமாதங்கள் உழைப்பிற்காக செலவிட்டு பல துன்பங்களை அனுபவித்த விவசாயிகள் அருவடையின் பின்பு ஓய்வு எடுப்பதற்காகவும் உண்டு கழித்து மகிழ்வதற்காகவும் இவ் மாதம் முழுதும் பண்டிகைமாதமாக கொண்டாடப்பட்டுள்ளது. தை பொங்கலின் சிறப்பை சங்க இலக்கிய பாடல் வரிகள் கீழ் உள்ளவாறு குறிப்பிடுகின்றன. 


சங்க இலக்கியத்தில் தைப்பொங்கல் என்பது,
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணையும்
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகையும் 
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும்
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறும்
 “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும்  எடுத்துரைக்கின்றன. 


கொண்டாடும் முறை மாற்றம் பெற்றிருந்தாலும் கொண்டாடும் நோக்கத்தில் மாற்றம் இன்றி இன்றும் தமிழர்கள் உழவர்த்திருநாளை சிறப்பாக கொண்டாடுகின்றமை மகிழ்ச்சியை தருகின்றது.