You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இலங்கை மன்னனுடன் தொடர்புடைய முருதேஸ்வரர் ஆலயம்.

2019-01-29


மூன்று புறங்களிலும் அரபிக் கடல் சூழ்ந்திருக்க அழகிய இடமாய்  விளங்கும் கண்டுக கிரி குன்றில் அமைந்துள்ளது  முருதேஸ்வர் ஆலயம். இவ் ஆலயத்திற்கும் இலங்கையை ஆண்ட இராவணனுக்கும் முக்கிய தொடர்பு உள்ளது. 


இராவணன் ஆத்த லிங்கத்தை வணங்கி இறப்பில்லாத நிலையை அடைய விரும்பினான். சிவனை நோக்கி பெரும்தவம் செய்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவன் அவன் கேட்டதற்கு இனங்க ஆத்மலிங்கத்தை வழங்கி அருளினார்.


சிவன் உலகை  அழிவில் இருந்து காக்கும் பொருட்டு இராவணிடம் நிபந்தனை ஒன்றை வைக்கின்றார். அதன்படி ஆத்மலிங்கத்தை கீழே வைத்தால் மீ்ணடும் எடுக்க முடியது. இராவணன் அரக்கனாக  சித்தரிக்கப்படுபவன் அவன் இறவா வரம் பெற்றால் உலகுக்கு தீமை விளையும் என எண்ணிய கணபதியும் திருமாலும் தமது சூட்சியாழ் ஆத்மலிங்கத்தை கீழே வைக்கும் படி செய்து விடுகின்றார்கள். உண்மையை அறிந்த இராவணன் கோவம்  கொண்டு ஆத்மலிங்கத்தை பெயர்த்தெடுக்க முனையும் போது அதன் சில பாகங்கள் சிதறுகின்றன அவ்வாறு சிதறிய  பாகம் விழுந்த இடம் தான் இந்த முருதேஸ்வரர் அமைந்துள்ள இடம் என புராணங்களில் கூறப்படுகின்றது. 


உலகிலேயே உயரமான கோபுரங்களில் ஒன்றாக கருதப்படும் 237 அடி உயரமான இராஜ கோபுரம் கொண்டு ஆன்மீக உணர்வின் அதி உட்சமாக திகழும் இவ் ஆலயத்தின் அலை மோதும் கறையில் உலகிலேயே இரண்டாவது உயரமான 123 அடி பிரம்மாண்ட சிவன் சிலையுடன், நந்தி முன்புறத்தில் நிற்க காட்சி தருகின்றது. இந்தக் கோயிலை சுற்றிலும்  கல்வெட்டுக்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இவ் மூலவரின் சிலைக்கு கீழ் ஆத்மலிங்கம் இருப்பதாக பக்தர்களால் நம்பப்படுகின்றது. இங்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் சூரிய ஒளி நேரடியாக சிலை மேல் படும்போது ஒளிரும்படியாக இந்த சிவன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.


தென்னிந்திய கட்டிடக் கலையின் உன்னத நிலைக்கு சாட்சியாக அமையும் இவ் கருங்கல் ஆலயம் காண்பவரை தன்நிலை மறக்கச்செய்கின்றது.