You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஒரு லட்சம் தேங்காய்களால் கொண்டு உருவாக்காப்பட்ட 80 அடி உயர சிவரூபம்

2019-03-04


ஈசன் வழிபாட்டிற்கு உகந்த நாளான மகா சிவராத்திரி தினத்தில் உலகலாவிய ரீதியில்  சிவன் பக்தர்கள் விரதமிருந்து இறைவனை வழிபடுகின்றனர்.  ஆனால், ஒவ்வொரு ஆண்டும் மெய்சிலிர்க்கும் வகையில்  பிரமாண்டமான சிவரூபம் அmமைத்து சிவராத்திரியைக் கொண்டாடுவதை ஒரு கிராமம் வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

ஆந்திரமாநிலம், சித்தூர் மாவட்டம், நகரில் உள்ள கீளப்பட்டு என்ற கிராமத்தில்தான் இந்த அதிசயம் ஆண்டு தோறும் நடைபெறுகின்றது. இங்கு அமைந்துள்ள ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை சந்திரமௌலீஸ்வரர் கோயிலில்  சுமார் 1,500 ஆண்டுகள் பழைமையும் பெருமையும்  வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. குருபகவான் இரு சந்நிதிகளில் எழுந்தருளி அருள்பாலிப்பது  ஆலயத்தின் மற்றுமொரு சிறப்பாகும்.


ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா இங்கு விமர்சையாக நடைபெறும். சிவனுக்கு உகந்த பழங்கள், காய்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு பிரமாண்டமான சிவரூபம் அமைத்து, மகா சிவராத்திரியை கொண்டாடுவார்கள். 2015-ம் ஆண்டு, மகா சிவராத்திரியின்போது, 3 டன் கரும்புகளால் 16 அடி உயரத்திற்கும், 2016 -ம் ஆண்டு வில்வ காய்களால் 25 அடி உயரத்திற்கும் சிவரூபம் அமைத்திருந்தார்கள். 2017-ல் விபூதி லிங்கமும், 2018-ல் மார்க்கண்டேய ரூபத்தில் எமனை சம்ஹாரம் செய்வதைப் போன்றும் தத்ரூபமான முறையில் ரூபம் வார்த்திருந்தார்கள்.

இந்த ஆண்டு, வித்தியாசமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான தேங்காய்களால் 80 அடி உயரத்துக்கு மிகப் பிரமாண்டமாக சிவரூபம் அமைத்திருக்கிறார்கள். தேங்காய்களில் தண்ணீர் நிரம்பியிருப்பதைப் போல், கோயிலுக்கு அருகில் வற்றிப்போயிருக்கும் நாக தீர்த்தம், ஐஸ்வர்ய தீர்த்தத்தில் மீண்டும் நீரூற்று பெருகிக் குளம் நிரம்ப வேண்டும் என்ற பிரார்த்தனைக்காக, குளத்தின் மையப்பகுதியில் தேங்காய்களால் ஈசனை வடிவமைத்திருக்கிறார்கள். கீளப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கணேஷ் தலைமையில் பள்ளி மாணவர்களான சனத்குமார், கேசவன், நித்தீஸ்குமார், லக்கி ரோகித், சச்சின், சஞ்சய், சுராஜ், ரோஷன் உள்ளிட்டோர் மூன்று மாதங்களுக்கு மேலாகக் கலைநயத்தோடு சிவனின் ரூபத்தைத் தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார்கள்.