You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




மாயன் நாகரீக்துடன் தொடர்புடைய 1000 ஆண்டுகள் பழமையான தொல் பொருட்கள் கண்டுபிடிப்பு

2019-03-07


மெக்ஸிகோ சீச்சென் இட்சாவில் உள்ள புராதன நகரான மாயன் நகருக்கு கீழ் 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட  குகையையொன்று உள்ளது. இந்த குகையானது  இதுவரைகாலமும் தொல்பொருள் ஆய்வாளர் ஒருவரால் காரணமின்றி மூடப்பட்டு இருந்தது.


கடந்த வாரம் மறுமொரு இடத்தை ஆராய சென்ற  கில்லர்மோ எனும் தொல்லியலாளர் தற்செயலாக அந்தக் குகையைக் கண்டுபிடித்துள்ளார்.
குகையை ஆராய்ந்த போது அதிலிருந்து கி.பி 700ஆம் ஆண்டிலிருந்து கி.பி.1000 ஆண்டு வரை தொன்மையான ஊதுபத்தி கொளுத்தும் கலன்கயையும் மற்றும் நூற்றுக்கணக்கான கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 


இவ் தொல் பொருட்களை ஆய்வு செய்வதன் மூலம் சீச்சென் இட்சா மக்களின் தோற்றம், வாழ்க்கை முறை, நம்பிக்கை ஆகியவற்றைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள முடியும் என என்று மெக்ஸிக்கோ தொல்பொருள் ஆய்வாளர் கில்லர்மோ டே அன்டா கூறியுள்ளார். அத்துடன் குகையில் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ளத் திட்டமிடுவதாகத் கில்லர்மோ மேலும் தெரிவித்துள்ளார்.