You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




உலகப் பாரம்பர்யச் சின்னமாக அறிவிக்கப்படுமா ராமப்பா கோயில் ?

2019-03-11


ஆண்டுதோறும் யுனெஸ்கோ அமைப்பு உலகில் தகுதி வாய்ந்த பாரம்பர்ய மற்றும் பண்பாட்டுச் சின்னங்களை தேர்ந்தெடுத்து  பாதுகாப்பது வழக்கம். இதற்காக உலகளாவிய ரீதியில் இயற்கை, பாரம்பர்யம், கலாசாரம், பண்பாடு மற்றும் கலை அடிப்படையில் விண்ணப்பிக்கப்படும் சின்னங்களிலிருந்து ஆய்வு செய்து தகுதி வாய்ந்தவற்றைத் தேர்ந்தெடுத்து யுனெஸ்கோ அமைப்பு பாரம்பர்யச் சின்னமாக அறிவிக்கும்.


 அந்த வகையில் இந்தியாவின் வாரங்கல் கோயில்  முதல் தடவையாக  யுனெஸ்கோ பரிந்துரைப் பட்டியலில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இடம்பெற்றிருக்கிறது. யுனெஸ்கோ அமைப்பின் ஹெரிடேஜ் குழுவினர் ஆய்வு செய்து, தகுதியிருப்பின் ராமப்பா கோயிலை உலகப் பாரம்பர்யச் சின்னமாக அறிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


 ராமப்பா கோயில் அல்லது இராமலிங்கேஸ்வரர் கோயில் எனப்படும் இவ் ஆலயம் இந்தியாவின் தெலங்கானா மாநிலம், ஜெய்சங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில் வாரங்கல்லிலிருந்து 77 கி.மீ தொலைவில் பாலம்பேட் கிராமத்தில் அமைந்திருக்கிறது. இக்கோயிலின் 1213ம் ஆண்டின் கல்வெட்டுக் குறிப்பின் படி,  கி.பி 1213 ம் ஆண்டு காகதீய அரசர் கணபதி தேவர் காலத்தில், அவரது படைத்தலைவர் ரேச்சர்ல ருத்திரன் என்பவரால் இவ் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.. காகத்தீய கலைப் பாணியில் கட்டப்பட்ட 800 ஆண்டுகள் பழைமையான இந்த கோயில் இக்கோயில் அழகிய சிற்பங்களுடன் செம்மணற்கலால் கட்டப்பட்டுள்ளது. மேலும் கோயிலைத் தாங்கும் தூண்கள் கருங்கற்களால் நிறுவப்பட்டுள்ளதுடன் கோயில் கருவறை செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. அழகிய தூண்கள், குறுஞ்சிற்பங்கள், நளினமான சிற்பங்கள் நிறைந்த இந்தக் கோயிலை தற்போது இந்தியத் தொல்லியல் துறையினர் பராமரித்து வருகிறார்கள். 


ராமப்பா கோயில் தேர்ந்தெடுக்கப்பட்டால் தெலங்கானாவிலிருந்து அறிவிக்கப்படும் முதல் யுனெஸ்கோ பாரம்பர்யச் சின்னமாக இது இருக்கும் என்பதுடன் ஏற்கெனவே தமிழகத்திலிருந்து மாமல்லபுரம், தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழீச்சுவரம், தாராசுவரம் கோயில் ஆகியவை யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பர்ய மற்றும் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது!