You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நாடு, மொழி கடந்தாலும் இந்து மதத்தை பின்பற்றுவது தடையாகது - சான்று பகிரும் ஆபிரிக்க நாட்டு இந்து ஆலயம்.

2019-03-12


இந்து தர்மமானது இந்தியாவில் தோற்றம் பெற்றிருந்த போதும் அதன் புனிதத்துவம் காரணமாக உலகெங்கும் வியாபித்து காணப்படுகின்றது. இந்து மதத்தை பின்பற்றும் மக்கள் மொழியை கடந்து  எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமது மதத்துடன் ஒன்றி வாழ்கின்றனர் என்பதற்கு ஆபிரிக்க நாடான, போட்ஸ்வானாவின் தலைநகர், காபரோனில் இமைந்துள்ள இந்துக் கோயில் ஒரு எடுத்துகாட்டாக உள்ளது.


இந்து மதம் தோற்றம் பெற்ற இந்தியா மற்றும் அதனை தழுவிய நாடுகளில் வாழும் மக்களில் சிலர் இந்து மதம் பற்றிய சரியான தெளிவு இல்லாததால் பிர மதத்தை தழுவுகின்றனர். இந்து மதத்தை சரியாக புரிந்து கொள்பவர்களுக்கு நாடுகடந்து மொழிகடந்து வாழும் போதும் மதத்தை பின்பற்றுவது தடையாக அமையாது. எனவே ஒவ்வொரு இந்துவும் தமது மதத்தை புரிந்துகொண்டு அதன்படி ஒழுகுவதன் மூலம்  ஆன்ம ஈடேற்றம் அடையலாம்.


காபரோனில் மாரு-ஆ-ரோபோட்ஸ் அருகே, உள்ள எரிபொருள் நிரப்பும் இடத்திற்கு பின்புறம், இந்த இந்து கோயில் அமைந்துள்ளது.


இந்திய ஆலயங்களின் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இவ் ஆலயத்தின் உள் நுழைந்தவுடன் நவகிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளதை காணலாம். கோயிலின் நடுவில் சிவலிங்கம் அமைந்துள்ளது.


கோயில் சுவர்களில் சிறு குகைகள் போல அமைக்கப்பட்டு அதில், சிவபெருமானை சுற்றி சுப்பிரமணியர், பார்வதி, விநாயகர் ஆகிய சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்திற்கு முன்னால், நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது.


கோயிலின் உட்பகுதியில் பெரிய மண்டபம் ஒன்றும் காணப்படுகின்றது.


அதில் ராமர், சீதா, லட்சுமணன், அனுமான் சிலைகளும் உள்ளனமேலும், வள்ளி, தெய்வானையுடன் முருகன், லட்சுமி, பத்மாவதியுடன் வெங்கடேஸ்வரர் சிலைகளும் அங்கு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் ஆலயத்தில் மகா சிவராத்திரி, ராமநவமி, தசரா, தீபாவளி, மேலும் பல முக்கிய விழாக்கள்  சிறப்பாக கொண்டாடப்படும்.

ஆபிரிக்காவில் வாழும் இந்துக்களுக்கு இவ் ஆலயம் சிறந்த ஆன்மீக கலமாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.