You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பதினைந்து நாள்கள் மட்டுமே பூக்கும் பழநி கடம்ப மலர்கள்!

2019-05-15


 

முருகனின் ஆறு படை வீடுகளில் ஒன்றான பழநி மலையையும் `கடம்ப வனம்' என்று சொல்வதுண்டு. எழில்மிகு பழநி மலையில் வருடத்துக்குப் பதினைந்து நாள்கள் மட்டுமே கடம்ப மலர்கள் பூக்கின்றன்றமை இதன் பெருமையை இரட்டிப்பாக்குகின்றது.

இந்தக் கடம்ப மலரின் நறுமணம் பல்வேறு மருத்துவக் குணங்கள் உடையது என்பதால், இந்த மலர்களைத் தழுவி வீசும் காற்றினை `சஞ்சீவி காற்று' என்றும் சொல்கின்றனர் பழநி வாழ் மக்கள். 
முருகனுக்கு மட்டுமன்று திருமாலுக்கும் பூஜிக்க உகந்த மலர் கடம்ப மலர். கோடைக்காலத்தில் மட்டுமே மலரக்கூடிய இந்தக் கடம்ப மரத்தின் மலர்களையும் இலைகளையும் மாலையாகத் தொடுத்து முருகனுக்குச் சாத்துவது விசேட வழிபாடாக இந்த நாட்களில் பார்க்கப்படுகின்றது.


பழநியில், சித்திரை மாதத்தில் வரும் அக்னி நட்சத்திர நாள்களில் கிரிவலம் வருவது சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. காரணம், அந்த நாள்களில்தான் கடம்ப மரங்கள் பூத்துக் குலுங்கும். கடம்ப மலர்களின் வாசம் இந்தக் காலகட்டத்தில் காற்றில் கலந்து வீசும். கிரிவலம் செல்பவர்கள் அதை நன்கு அனுபவிக்கமுடியும். இந்த நாள்களில், பழநி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களும், கிரிவலம் வரும் பக்தர்களும் கடம்ப மலர் அணிந்து செல்வதையும் காணமுடியும். இது மத நம்பிக்கையாக இருந்தாலும் கடம்பமலரின் மூலிகை நலனை அனைவரும் பெருவதற்கான ஏற்பாடாகவும் இருக்கலாம். 


மேலும் கடம்ப மரத்துக்கும் முருகனுக்குமான தொடர்பை சங்கப் பாடல்கள் பலவற்றிலும் காணலாம். `கடம்பமர் நெடுவேள்' என்று பெரும்பாணாற்றுப்படையும், `கடம்பின் சீர்மிகு நெடுவேள்' என்று மதுரைக் காஞ்சியும் சுட்டுகின்றன. கடம்ப மலர்களால் கட்டப்பட்ட மாலைகளை விழாக்களின்போது முருகனுக்கு அணிவிக்கப்படும் செய்தி அகநானூறு, புறநானூறு ஆகிய சங்க இலக்கியங்களில் தெரிவிக்கப்படுகிறது.