You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சைவத் தமிழ் மண்ணான யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த "இந்துசாதனம்" பழைய பதிப்பு

2019-06-11



இறைவனருளால் 26/04/1974 அன்று யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த "இந்துசாதனம்" கிடைக்கப்பெற்றுள்ளது.  

பழமையான இந்த பதிப்பில் உடுவில் அம்மன் கோவில் என வழங்கும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேவஸ்தானம் துவஜாரோகண மகோற்சவத்தை முன்னிட்டு நடத்திய திருமுறைப்  பெருவிழா  (26-4-74 முதல் 6-5-74 வரை) மற்றும் நல்லை ஞானசம்பந்தர் ஆதீனத்தில் திருநெறிய தெய்வீக மாநாடும் ஞான சம்பந்தர் மகோற்சவமும் குறித்த செய்திகள் எமது முன்னோர்கள்  எப்படி யாழ்பாணத்தை சிவபூமியாகிய  ஈழநாட்டின் சிரசாகவும் சைவத் தமிழ் மண்ணாகவும் கட்டி காத்து வந்தனர்  என்பதனை எடுத்துக்காட்டுகின்றது.


இலங்கை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் நடைபெறும் கோவில்  மகோற்சவங்களிலும் ஏனைய சைவ நிறுவனங்களின்  நிகச்சிகளிலும்  பன்னிரு திருமுறைகள் பாராயணம், சைவத் தமிழ் சொற்பொழிவுகள் போன்றவற்றிற்கும் முக்கியத்துவம்  அளித்தால் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் என்பதற்கு இதுவே சான்று, அதற்காக அனைவரும்  இறைவனைப் பிராத்தனை செய்வோம்.


மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்