You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு

2019-06-26


சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெறும் 5-ம் கட்ட அகழாய்வில் அருகருகே 2 சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
தமிழரின் நாகரீக வளர்ச்சிக்கு புதிய வடிவத்தை ஏற்படுத்திய கீழடி ஆய்வு 2015 முதல் பல கட்டங்களாக  நடைபெற்றுவருகின்றது.

இதனை தமிழரின் மத்திய தொல்லியல் துறை அகழாய்வை மேற்கொள்கின்றது. இதில் கண்டறியப்பட்ட ஆயிரக்கணக்கான தொல் பொருட்களை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்துள்ளது கண்டறியப்பட்டது.


பல போராட்டங்களைத்தொடர்ந்து கீழடியின் 5-ம் கட்ட அகழாய்வுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து ஜூன் 13ஆம் திகதி அகழாய்வு பணிகள் தொடங்கின. இந்நிலை யில், கருப்பையா என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் முதற்கட்டமாக 4 குழிகள் தோண்டியதில் 5 மீட்டர் ஆழத்தில் பழங்கால மண்பாண்ட ஓடுகள், பானைகள், அழகுப் பொருட்கள் கிடைத்துள்ளன. 


தொடரந்து முருகேசன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் 2 அடி ஆழத்தில் குழிகளைத் தோண்டியபோது  மூன்று அடி நீளம், ஒரு அடி அகலம், 10 செ.மீ. உயரம் கொண்ட செங்கற்களால் ஆன  நீண்ட சுவர் ஒன்று தென்பட்டுள்ளது. அதனருகே பாதி அளவுக்கு மற்றொரு சுவரும் இருந்துள்ளது. 


கற்கள் நல்ல உறுதித் தன்மையுடன் உள்ள இந்தச் சுவர் கட்டிடத்தின் மேற்பகுதியா, கீழ்பகுதியா என்று கண்டறிய முடிய வில்லை. முழுமையாகத் தோண்டிய பிறகுதான் உறுதியாகக் கூற முடியும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
5-ம் கட்ட அகழாய்வு தொடக்கத்திலேயே இரட்டைச் சுவர் கண்டறியப்பட்டுள்ளதால் தோண்ட, தோண்ட அதிக எண்ணிக்கையில் தொல்பொருட்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி bbc