You are here : arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.

October 01, 2014


நாட்டியத்தில் அரங்கம், அரங்க அமைப்பு பற்றிய சாஸ்திர விதிமுறைகள் உள்ளன. ஒன்பது வகை அரங்கங்கள் பண்டைய பாரதத்தில் இருந்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. சதுரம் (மிகப்பெரியது), நீள்சதுரம் (மத்திமமானது), முக்கோணம் (சிறியது) என மூன்று அளவுகளில் இருந்ததாகவும் இதில் மத்திம அளவின் நீள் சதுர அரங்கத்தைத்தான் பரதர் மிகவும் உசிதமாகவும் கருதினார். ஏனெனில் முகமெய்ப் பாடுகளின் பாவம் நன்கு காணக்கூடிய அரங்கம் இதுவாகும். தற்போது அரங்கங்கள் மிகப்பெரிதாகவும் ஒலிபெருக்கிகளின் உதவியால் வசனமோ, பாட்டோ யாவருக்கும் நன்கு கேட்கும் வகையிலும் முகபாவம் நன்கு தெரிவதற்கு ஒளி அமைப்பு நன்றாகவும் செய்யப்படுகின்றது. நாட்டிய சாஸ்திரத்தின்படி அரங்கங்கள் அமைக்கப்படும்போது அழகியசிலைகளும் சித்திரங்களும் நுட்பமான கலை எழில் கொண்ட தூண்களும் அமைக்க வேண்டும் என பரதர் கூறுகின்றார். மேலும் யானை, புலி, அரவம் போன்ற வடிவங்களும் சிருங்கார சித்திரங்களும் அழகிய சாளரங்களும் கொண்டு கலையழகோடு அரங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் கூறுகின்றார். நாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள் நாட்டிய விதிமுறைப்படி எவ்வாறு சிறப்பாக அமைந்தால் நாட்டிய நிகழ்ச்சி சிறப்புற அமையும் என்பதை இக்கட்டுரை விளக்குகின்றது.