You are here : arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’

October 11, 2014


ஸ்ரீஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’ எனும் நாடகப்பாங்கில்  அமைந்த பாடல்கள் உலக பிரசித்தியானவை. இப்படைப்பின் மூலம் இந்திய கவிஞர்களுள் இவருக்கென முதன்மை இடமுண்டு. கிருஷ்ண பகவானின் பெருமைகளைப் போற்றி துதிக்கும் பக்தி பாடல்களின் தொகுப்பே ‘கீத கோவிந்தம்’ ஆகும். கிருஷ்ணன் ராதையின் மீது கொண்ட காதலை இனிமையாக வர்ணிக்கிறது.                                                                                                                                                                                                                                                                           ஆடல், பாடல், கதையம்சம் நிறைந்த இக்காவியம் அனைத்து சங்கீத வித்துவான்களின் விருப்பத்துக்குரியதொன்றாகும்.  வீரகேசரியின் 85 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கீதகோவிந்தத்தில் அஷ்டபதி என கூறப்படும் எட்டுவரி பாடல் ஒன்றுக்கு  அண்மையில் இலங்கை வந்த நாட்டிய மணி ‘காயத்திரி ஸ்ரீராம்’  அழகாக நடனமாடி கீதகோவிந்தத்தை எடுத்துக்காட்டியிருந்தார்.