You are here : arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஷங்கரின் சர்வதேச சிறுவர் போட்டிகள்

2019-10-23


சுவாமி விவேகானந்த கலாசார நிலையம்

 

இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு

************

கொழும்பு சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில்

ஷங்கரின் சர்வதேச சிறுவர் போட்டிகள்

இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுடைய பிறந்த தினத்தை நினைவுகூரும் நாளில் அதற்கு சமாந்தரமாக ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14 ஆம் திகதியன்று கொண்டாடப்படும் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கொழும்பு சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஷங்கரின் சர்வதேச சிறுவர் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.30 மணிமுதல் பகல் 01.00 மணி வரை கொழும்பு 07, இலக்கம் 16/2 கிரகரிஸ் வீதியில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்த கலாசார நிலையத்தில்(SVCC)   நடைபெறும்.

இங்கு நடைபெறும் வர்ணம் தீட்டுதல்/ ஓவியம்/ எழுத்து ஆகிய போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு நாடு முழுவதுமுள்ள சிறுவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

இங்கு நடைபெறும் வர்ணம் தீட்டுதல்/ ஓவியம்/ எழுத்து ஆகிய போட்டிகளுக்கான தலைப்பு, “ எமக்குள்ள ஒரேயொரு வீடான பூமியை பாதுகாப்போம்”, என்பதாகும்.

 

2004 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதியன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்த சகல சிறுவர்களும் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள முடியும். பங்குபற்றிய சகல சிறுவர்களின் ஆக்கங்களும் ஷங்கர் சர்வதேச சிறுவர் போட்டி 2020க்காக புதுடில்லிக்கு அனுப்பி வைக்கப்படும்.

 

இந்த போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் சிறுவர்கள் தமது பெயர் விபரங்களை நிலையத்துடன் தொடர்புகொண்டு (Tel. 011-2684698, Telefax 2684697, e-mail iccrcolombo2@gmail.com) வழங்க முடியும் அத்துடன் 2019 நவம்பர் 23 ஆம் திகதி காலை 09.00 மணிக்கு சுவாமி விவேகானந்த கலாசார நிலையத்தில் (SVCC)  சமூகமளிக்க வேண்டும்.

 

மேலதிக தகவல்களுக்காக  சுவாமி விவேகானந்த கலாசார நிலையத்தை , (முன்னாள் இந்திய கலாசார நிலையம்) 2684698 என்ற தொலைபேசி இலக்கத்தில் அல்லது iccrcolombo2@gmail.com என்ற இ மெயிலை தொடர்பு கொள்ளவும்.